பீகாரில் NRC-CAA-க்கு இடமில்லை... மாநில முதல்வர் நிதிஷ் குமார்!

தங்கள் மாநிலத்தில் NRC பொருந்தாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திங்கள்கிழமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்!

Updated: Jan 13, 2020, 03:38 PM IST
பீகாரில் NRC-CAA-க்கு இடமில்லை... மாநில முதல்வர் நிதிஷ் குமார்!

தங்கள் மாநிலத்தில் NRC பொருந்தாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திங்கள்கிழமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்!

இதன் மூலம் குடியுரிமை திருத்தச் சட்டமும் மீண்டும் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என அவர் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பீகார் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர், மாநிலத்தில் NRC நடைமுறைபடுத்துவது குறித்து எந்த சந்தேகமும் இல்லை, ஏனெனில் அது அசாமை குறித்தது. பிரதமர் நரேந்திர மோடியே அதை தெளிவுபடுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நிதீஷ் குமார் கூறினார். மேலும், யாராவது விரும்பினால் அது சபையில் விவாதிக்கப்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டால், அது புதிதாக கருதப்பட வேண்டும். NRC-யைப் பொருத்தவரை, பீகாரில் இதை நடைமுறைப்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை, அல்லது அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கமும் இல்லை எனவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

முன்னாதாக நிதீஷ் குமாரின் கட்சி (JDU) MP-க்கள் பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். என்றபோதிலும் NRC நிதீஷ்குமார் எப்போதும் தங்கள் மாநிலத்திற்கு ஆதரவானது அல்ல என இக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். 

பாஜகவும் நிதீஷ் குமாரின் (JDU) கட்சியும்  பீகாரில் கூட்டு அரசாங்கத்தை நடத்தி வருகின்றன.

JDU-வின் துணைத் தலைவரான பிரசாந்த் கிஷோர், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC தொடர்பாக மோடி அரசாங்கத்தின் மீது நிறைய தாக்குதல் நடத்தியவர். இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளையும் கூட  பிரசாந்த் பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து பிரஷாந்த் ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்துள்ளதாவது, "CAA- NRC-ன் முறையான மற்றும் தெளிவான மறுப்புக்கு காங்கிரஸ் தலைமைக்கு நன்றி தெரிவிக்க நான் விரும்புகிறேன். சிறப்பு முயற்சிக்கு பிரியங்கா வாத்ரா மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு சிறப்பு நன்றி. நான் மீண்டும் பீகார் மக்களுக்கு உறுதியளிக்கிறேன் CAA மற்றும் NRC ஆகியவை மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படாது" என குறிப்பிட்டுள்ளார்.