ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட யாரையும் வற்புறுத்தக்கூடாது -முக்தா அப்பாஸ் நக்வி!

ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட யாரும் யாரையும் வற்புறுத்தக்கூடாது என சிறுபான்மையினர் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்!

Last Updated : Jul 14, 2019, 08:55 PM IST
ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட யாரையும் வற்புறுத்தக்கூடாது -முக்தா அப்பாஸ் நக்வி! title=

ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட யாரும் யாரையும் வற்புறுத்தக்கூடாது என சிறுபான்மையினர் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்!

ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டதால் இளைஞர் ஒருவர் மேற்கு வங்க காவல் துறை அதிகாரி மற்ற போலீசார் முன்னிலையில் தாக்கப்படுகிறார் என்ற பதிவு சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அதன் உண்மை பின்னணி புலப்பட்டது. உண்மையில் தற்சமயம் பரவும் வீடியோ 2014-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகவும். வீடியோவில் உள்ள சம்பவத்திற்கும் மேற்கு வங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எனினும், தற்போதைய வைரல் பதிவினை பல்லாயிரம் பேர் உண்மையென நினைத்து பகிர்ந்து வருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியானது.

முப்பது வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் சிவப்பு நிற சட்டை அணிந்திருக்கும் நபர் ஒருவரை காவல் அதிகாரி மற்ற காவலர்கள் முன்னிலையில் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. காவல் அதிகாரி இந்தி மொழியில் பேசிக் கொண்டே தாக்குதலை தொடர்கிறார். தாக்குதலுக்குள்ளான நபர் தொடர்ந்து ஜெய் பஜ்ரங் பலி என கோஷமிட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலான அதேவேளையில் பாஜக-வினர் மக்களை ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் இதுகுறித்து நக்வி தனது கருத்தினை பதிவு செய்கையில்., ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ‘கும்பல் வன்முறையால் தாக்கப்பட்ட சம்பவங்களில் ஒரு வழக்கில் கூட கைது செய்யப்படாமல் இல்லை. ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தில் பெயில் கிடைக்காமல் 6 மாதம் சிறையில் இருக்கிறார்கள். உத்திர பிரதேசத்தில் நடந்த சம்பவத்தில் 4 மணிநேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் எதுவாக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றும் நக்வி தெரிவித்துள்ளார்.

Trending News