விரைவில் கிடைத்துவிடுமா கொரோனா தடுப்பு மருந்து?.. US அறிவிப்பு...

அமேரிக்காவின் பயோடெக்னாலஜி நிறுவனமான நோவாவாக்ஸின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் கிரிகோரி க்ளென், தனது நிறுவனம் கொரொனா தடுப்பு மருந்தின் முதல் கட்ட பரிசோதனையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.. 

Last Updated : May 28, 2020, 05:02 PM IST
விரைவில் கிடைத்துவிடுமா கொரோனா தடுப்பு மருந்து?.. US அறிவிப்பு...  title=

அமேரிக்காவின் பயோடெக்னாலஜி நிறுவனமான நோவாவாக்ஸின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் கிரிகோரி க்ளென், தனது நிறுவனம் கொரொனா தடுப்பு மருந்தின் முதல் கட்ட பரிசோதனையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.. 

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் நோயாளிகள்  மீது கொரோனா தொற்றுக்கான தடுப்பு  மருந்தை பரிசோதிக்கத் தொடங்கியுள்ளதாக  அறிவித்துள்ள அமெரிக்காவின் பயோடெக்னாலஜி நிறுவனம், இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரொனா பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

“நிறுவனம் முதல் கட்ட பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இதில் மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகரங்களைச் சேர்ந்த 131 தன்னார்வலர்கள் மீது  இந்த மருந்து பரிசோதிக்கப்படும்” என்று நோவாவெக்ஸ் (Novavax) என்ற அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் கிரிகோரி க்ளென் தெரிவித்துள்ளார்….

மேரிலாண்டில் இருக்கும் 'நோவாவேக்ஸ்' தலைமையகத்திலிருந்து ஆன்லைன் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய க்ளென், 'நாங்கள் தடுப்பு மருந்துகளையும் தடுப்பூசிகளையும் ஒரே சமயத்தில் உற்பத்தி செய்கிறோம். இதன்  மூலம் இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து பொதுமக்களும் கொரொனாவுக்கான தடுப்பு மருந்தை பெறமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், சுமார் ஒரு டஜன் சோதனை மருந்துகள் ஆரம்ப கட்ட பரிசோதனையில் உள்ளன. இந்த மருந்துகள் பயனுள்ளதாக நிரூபிக்கப்படுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த அனைத்து மருந்துகளும் வெவ்வேறு நுட்பங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை. ஆனால்  தடுப்பு மருந்தை தயாரிக்கும் மும்முரமான போட்டியில் எந்த நாடு வெற்றிப்பெறும்  என்ற எதிர்பார்ப்பும் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.

“நாங்கள் தயாரிக்கும் மருந்துகள் வைரஸின் அருகில் கூட நெருங்க முடியவில்லை” என்று கடந்த மாதம் நோவாவேக்ஸ் கூறியது…. ஆனால் பிற வைரஸ்களைப் போலவே நோய் எதிர்ப்பு சக்திக்கு முன் தலைவணங்குகிறது' என்று அவர் தெரிவித்தார். மேலும்,  'மரபணு பொறியியலைப் பயன்படுத்தும் நோவாவேக்ஸ், புரதத்தை பிரித்தெடுத்து சுத்திகரித்து, அதை வைரஸ் அளவிலான நானோ துகள்களாக தொகுக்கிறது' என்றும் நோவாவாக்ஸின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் கிரிகோரி க்ளென் தெரிவித்துள்ளார். 

- மொழியாக்கம்: ஹேமலதா.எஸ்

Trending News