எதிர்க்கட்சி விஞ்ஞானிகளின் சாதனைகளையும், பயங்கரவாத தாக்குதல்களையும் தவறாகப் பயன்படுத்துகிறது என அருணாச்சல பிரதேச தேர்தல் பிரட்சாரத்தில் மோடி குற்றசாட்டு!!
இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரட்சாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அருணாச்சல பிரதேச மாநிலம் ஆலோ பகுதியில் இன்று பிரசாரம் செய்தார். பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், பா.ஜ.,வின் முயற்சியால் அருணாச்சலில் வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. முந்தைய அரசுகள் புறக்கணித்த போது வடகிழக்கு மாநிலங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. நானும் மற்ற மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து இங்கு வருவதால் டில்லியுடன் வடகிழக்கிற்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.
PM in Arunachal: Bharat jab badi safalta haasil karta hai, naamdaron aur darbariyon ke chehre latak jaate hain. Bharat ne aatankiyon ko ghar ghus ke maara to inka ravaiya aapne dekha. Jab hamare vaigyanik dunia ko hairan karte hain to ye uska mazak udane ke bahane khoj lete hain. pic.twitter.com/hsqRkMLN2n
— ANI (@ANI) March 30, 2019
குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர துடிப்பவர்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் மீண்டும் வர அனுமதிக்காதீர்கள். ஊழலில் பசை போட்டு ஒட்டி அடித்தளம் அமைத்து உருவாக்கப்பட்டது தான் மெகா கூட்டணி. இந்தியாவின் சாதனைகளால் எஜமானர்கள் வருத்தம் அடைந்துள்ளதுடன், சந்தேகமும் கொண்டுள்ளனர் என்றார்.
மேலும், "உங்கள் அரசாங்கம் உங்கள் நம்பிக்கைகளை மதிக்கின்றது. ஏழு தசாப்தங்களாக சுதந்திரம் பெற்ற பிறகு, ரயில்வே வரைபடத்தில் அருணாச்சலத்தை வைத்துக் காவலாளி வழங்கப்பட்டார். வடகிழக்கு மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் பயணம், "வடகிழக்கில், தாமரை முதல் அருணாச்சல பிரதேசத்தில் பூக்கின்றது" என்று நினைவு கூர்ந்தார். பின்னர், பிரதமர் திப்ருகார் மோரானில் ஒரு கூட்டத்தை உரையாற்றினார்.
PM in Aalo, Arunachal: Dashako se experts keh rahe the Arunachal ko adhunik infrastructure ki zarurat hai lekin naamdar parivaar aur yahan unke raj durbari, apni sultanat ko mazboot karne mein jute the, aapki unko chinta nahi thi. Unko sabki bhalai se zyada, malai ki chinta thi. pic.twitter.com/CGBmXECFGN
— ANI (@ANI) March 30, 2019
70 ஆண்டுகளாக சுதந்திரம் அடைந்த பிறகு, அசாமின் குடும்பங்களில் 40 சதவீதம் மின்சாரம் மட்டுமே இருந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரம் கிடைக்கிறது. "அசாமின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் அல்லது மாநிலத்திலிருந்து ஊடுருவல்களை அகற்றுவது, இவை அனைத்தும் உங்கள் ஆசீர்வாதத்துடன் அடையப்பட்டுள்ளன," என்று பிரதமர் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சம் குடும்பங்களுக்கு 50,000 குடும்பங்களுக்கும், 40,000 தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளது எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.