ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத் தலைவர் மசூத் ஆசார் பாகிஸ்தானில் தான் உள்ளார் என்று அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த வாரம் பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய கார் CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது.
அந்த வகையில் இந்த தாக்குதல் உள்ளிட்டவை தொடர்பாக இந்தியாவால் தேடப்படும் நபர் மசூத் ஆசார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் CNN ஊடகத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி பதில் அளித்தபோது, மசூத் ஆசார் பாகிஸ்தானில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் மசூத் ஆசார் உடல்நலன் குன்றியிருப்பதாகவும் அவர் கூறினார்.