பெகாசஸ் உளவு விவகாரம்: உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 27, 2021, 12:12 PM IST
  • பெகாசஸ் உளவு விவகாரம் : உச்சநீதிமன்றம் விசாரணை குழுவை அமைத்துள்ளது.
  • விசாரணை குழுவின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும்.
  • வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தனிமனித உரிமைகளும் முக்கியம்: தலைமை நீதிபதி கருத்து.
பெகாசஸ் உளவு விவகாரம்: உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு  title=

புதுடெல்லி: இந்தியாவையே உலுக்கிப் போட்ட பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரிக்க, உச்சநீதிமன்றம் விசாரணை குழுவை அமைத்துள்ளது.  

இந்தியக் குடிமக்களைக் கண்காணிக்க இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸ் (Pegasus) பயன்படுத்தப்பட்டது குறித்து விசாரிக்க நிபுணர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. 
இந்த விசாரணை குழுவின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, இந்த விவகாரத்தில் விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது.

இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓவின் ஸ்பைவேரான பெகாசஸைப் பயன்படுத்தி சமூகத்தில் பிரபலமான குடிமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் மீது அரசாங்க முகமைகளால் ஸ்னூப்பிங் செய்யப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ALSO READ: பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா என்பதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது - மத்திய அரசு 

முன்னதாக, இந்தியாவில் உச்ச நீதிமன்ற (Supreme Court) நீதிபதி, 40 பத்திரிகையாளர்கள், பல அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக பிரபலங்கள் மற்றும் இன்னும் பலரது தொலைபேசி உரையாடல்கள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பல புகார்கள் எழுந்தன.

பெகாசஸ் குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்கள் கசிந்தவுடன் இந்தியா முழுவதும் சலசலப்பு ஏற்பட்டது. இது அரசியல் வட்டாரங்களில் புயலைக் கிளப்பியது. பெகாசஸ் கசிவுகள் குறித்த முமுமையான விசாரணை நடத்டப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் தனி நபர்களிடமிருந்தும் மனுக்கள் அனுப்பப்பட்டன. 

நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் எஸ்ஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி என்வி ரமணா (NV Ramana), நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.

‘நாம் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்கிறோம். வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தனிமனித உரிமைகளும் முக்கியம், பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல அனைத்து குடிமக்களின் தனி நபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும்’ என பெகாசஸ் தீர்ப்பில் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ALSO READ: பெகாசஸ் விவகாரம்: சில கணக்குகளை முடக்கியது NSO குழுமம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News