புதுதில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பல்வேறு எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு இடையே, இந்த கட்டட திறப்பு விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நாடாளுமன்ற கட்டத்தில் தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் செங்கோல் வைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நிறுவபட்ட செங்கோல்:
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டத்தில் சோழர் பாரம்பரியப்படி செங்கோல் நிறுவப்படும் என முன்னரே மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். இந்த நிலையில், அதன்படி, புதிய நாடளுமன்ற திறப்பு விழாவின் போது ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரத்தை மாற்றியமைக்காக முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பெறப்பட்டு அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'செங்கோல்' புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டது. லோக்சபா சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் உள்ள அவையில் வைக்கப்பட்டது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின்போது, நாட்டின் பல்வேறு பகுதியல் அமைந்துள்ள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு பொருட்கள் பெறப்பட்டன.
மேலும் படிக்க | செங்கோல் தற்போது தான் உரிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
செங்கோல் செய்தவரின் குடும்பம்..
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை உம்மிடி பங்காரு செட்டி மற்றும அவரது குடும்பத்தினர் உருவாக்கியிருந்தனர். இவர்களும் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். திருவாவடுதுறை ஆதீனம் தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் இந்த செங்கோலை மோடியிடம் வழங்கினார். இப்பேற்பட்ட செங்கோலை உருவாக்கிய உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான உம்மிடி அனில் குமார் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சுதந்திரத்தின் சின்னமான "செங்கோல்" ஐ மையமாகக் கொண்ட பெருமைக்குரிய விழாவில் கலந்துகொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் திரும்பியுள்ளார்.
இந்த விழா செங்கோலின் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதன் மதிப்பையும் வலியுறுத்துகிறது.
உம்மிடி பங்காரு குடும்பத்தார் மகிழ்ச்சி..
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்காக செங்கேல் செய்து கொடுத்த உம்மிடி பங்காரு குடும்பத்தினருக்கு இன்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் உள்ளிட்டோரால் மரியாதை செய்யப்பட்டது. 1947 ஆம் ஆண்டு ஆதீனங்களுக்கு செங்கோல் வழங்கிய இடமான பழமையான வளாகமான பாரிமுனையில் உள்ள உம்மிடி துவாரக்நாத் ஜூவல்லர்ஸ் இருந்ததைக் குறிப்பிட்ட உம்மிடி அனில் குமார், செங்கோலின் பாரம்பரியம் தொடங்கிய இடத்தைப் பாதுகாத்து கௌரவிப்பதில் தானும் தன் குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அசல் செங்கோல் குறித்து ஆய்வில் ஈடுபட்ட குடும்ப உறுப்பினர்களின் முக்கிய பங்களிப்பை மனதார பாராட்டினார். அவர்களின் விடாமுயற்சி மற்றும் நுணுக்கமான ஆராய்ச்சி இந்த வரலாற்று கலைப்பொருளை அங்கீகரிப்பதிலும் கொண்டாடுவதிலும் உச்சத்தை எட்டியுள்ளது என்றும் இது உம்மிடி குடும்பத்தினருக்கும் தேசத்திற்கும் மகத்தான கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று உம்மிடி அனில் குமாரின் மகன் அனிருத்தா உம்மிடி மேற்கோள் காட்டினார்.
“நீதி மற்றும் நிர்வாகத்தின் சக்திவாய்ந்த பிரதிநிதித்துவமாக கருதப்படும் செங்கோல் தேசத்திற்கான அடையாள பொக்கிஷம்”
உம்மிடி அனில் குமார் உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினருக்கு இந்த சிறப்பு மரியாதையை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். உம்மிடி அனில் குமாரின் மகன்களான அனிருத்தா உம்மிடி மற்றும் பிரத்யும்ன உம்மிடி ஆகியோர் தங்கள் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்த வளாகத்திலிருந்து வணிகத்தைத் தொடர்வதில் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அடைகின்றனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் அணில்குமார் உம்மிடியின் மனைவி உம்மிடி அபர்ணா லக்ஷ்மி, மகன்கள் அனிருத்தா உம்மிடி மற்றும் பிரத்யும்ன உம்மிடி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் படிக்க | கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சால்வை: பிரதமர் அளித்த கௌரவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ