PM Modi Speech Live: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது: பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக போகவில்லை. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது: என பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே தற்போது உரையாற்றி வருகிறார் 

Last Updated : Oct 20, 2020, 06:42 PM IST
PM Modi Speech Live: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது: பிரதமர் மோடி  title=

பிரதமர் மோடியின் உரையை நேரடியாக காண CLICK செய்யவும்


6:31 PM 10/20/2020
நமது வாழ்க்கை குறித்த பொறுப்புணர்வும், கொரோனா குறித்த விழிப்புணர்வு ஒரே நேர்கோட்டில் செல்லும் போது, அப்போதுதான் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்: PM மோடி அறிவுரை


6:28 PM 10/20/2020
நவராத்திரி, தசரா, ஈத், தீபாவளி, சாத் பூஜை, குருநானக் திருவிழா போன்ற அனைத்து பண்டிகைகளுக்கும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள்: PM Modi 


6:25 PM 10/20/2020
சில நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வந்த நிலையில், திடீரென்று தொற்று அதிகரித்து வருகின்றன. வெற்றி கிடைக்கும் வரை நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது. மருந்து இல்லாவிட்டாலும், முன்னெச்சரிக்கையாக இருப்போம்: பிரதமர் மோடி


6:22 PM 10/20/2020
கொரோனா போய்விட்டது அல்லது இப்போது கொரோனாவால் எந்த ஆபத்தும் இல்லை என்று கருதுவதற்கான நேரம் இதுவல்ல. கொஞ்சம் கவனக்குறைவு நம் முன்னேற்றத்தின் வேகத்தை நிறுத்த முடியும்: மோடி அறிவுரை


6:20 PM 10/20/2020
நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் தன்னலமின்றி இவ்வளவு மக்களுக்கு சேவை செய்கிறார்கள். இந்த முயற்சிகள் அனைத்திற்கும் இடையில், நாமும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது: பிரதமர் மோடி


6:16 PM 10/20/2020
இந்தியாவில் ஒரு மில்லியனுக்கு 600 பேர் இறந்தனர். இந்தியாவில் மருத்துவமனைகளில் 90 லட்சம் படுக்கைகள் உள்ளன. நாட்டில் கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை விரைவில் 100 மில்லியனைக் கடக்கும்.


6:10 PM 10/20/2020
உலகில் கொரோனா தடுப்பூசி எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்: பிரதமர் மோடி


6:08 PM 10/20/2020
பண்டிகை காலத்தை என்பதால் நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை  தவிர்க்க வேண்டும். நாட்டில் வியாபாரம் மெது மெதுவாக சூடு பிடிப்பதால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறது.


6:05 PM 10/20/2020
ஊரடங்கால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தாலும் கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது: 


புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார். இன்று மாலை 6 மணிக்கு ​​பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை அறிவிக்க உள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கை குறித்து நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கூற வாய்ப்பு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் (Twitter) பகக்த்தில், "இன்று மாலை 6 மணிக்கு நாட்டிற்கு ஒரு செய்தியை அறிவிக்க உள்ளேன். நாட்டு மக்களுடன் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். அனைவரும் 6 மணிக்கு ஒன்று கூட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

Trending News