மூழ்கி வரும் கேரளா! தயார் நிலையில் மத்திய அரசு: பிரதமர் மோடி

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது மத்திய அரசு என பிரதமர் மோடி டிவிட்

Last Updated : Aug 16, 2018, 09:50 AM IST
மூழ்கி வரும் கேரளா! தயார் நிலையில் மத்திய அரசு: பிரதமர் மோடி title=

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது மத்திய அரசு என பிரதமர் மோடி டிவிட்

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில்  வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 67-க்கும் மேற்ப்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். 

கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றனர். அதில் குறிப்பாக 20-க்கு மேற்ப்பட்ட அணைகள் தங்கள் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது.

கேரளத்தின் 7 மாவட்டங்களில் வெள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்ட்டு உள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட் மற்றும் இடுக்கி மாவட்டங்களாகும். இதில் இடுக்கி மடட்டத்தில் வரும் ஆகஸ்ட் 17-ம் நாள் வரை ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கனமழை காரணமாக கொச்சி விமான நிலைய சேவைகளை வரும் சனிக்கிழமை நண்பகல் 2 மணி வரை அனைத்து விதமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- 

Trending News