ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை திறந்து வைத்தார் மோடி!

1,500 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை நாளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி..!

Last Updated : Jul 10, 2020, 12:46 PM IST
ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை திறந்து வைத்தார் மோடி!  title=

1,500 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை நாளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி..!

மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாட்டில் வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்பின் வழியே 175 ஜிகா வாட் மின்சாரம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 750 MW உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். டெல்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக இத்திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்.... "சூரிய சக்தி இப்போது மட்டுமல்லாமல் 21 ஆம் நூற்றாண்டின் ஆற்றல் தேவைகளின் மையமாக இருக்கும். ஏனெனில், சூரிய சக்தி நிச்சயமானது, தூய்மையானது மற்றும் பாதுகாப்பானது. ரேவாவில் உள்ள இந்த சோலார் மின் உற்பத்தி ஆலை மூலம், இங்குள்ள தொழில்களுக்கு மின்சாரம் கிடைப்பது மட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயிலுக்கு கூட அதன் பலன்கள் கிடைக்கும். ரேவாவைத் தவிர, ஷாஜப்பூர், நீமுச் மற்றும் சத்தர்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன.

READ | மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் 100 மின்னணு சார்ஜிங் நிலையங்கள்...

மத்திய பிரதேசத்தில் 750 மெகாவாட் ரேவா சூரிய திட்டம் பற்றி அறிய வேண்டிய ஐந்து விஷயங்கள் இங்கே:

  1. இந்த திட்டம் ஒரு சூரிய பூங்காவிற்குள் (மொத்த பரப்பளவு 1500 ஹெக்டேர்) அமைந்துள்ள 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தலா 250 மெகாவாட் மின்சாரம் கொண்ட மூன்று சூரிய உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது.
  2. மத்தியப் பிரதேசத்தின் உர்ஜவிகாஸ் நிகாம் லிமிடெட் (MPUVN), மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் (RUMSL) இந்த சூரிய பூங்காவை உருவாக்கியது.
  3. ரேவா சூரிய திட்டம் என்பது கட்டம் சமநிலை தடையை உடைத்த நாட்டின் முதல் சூரிய திட்டமாகும்.
  4. இந்த திட்டம் தோராயமாக கார்பன் உமிழ்வைக் குறைக்கும். ஆண்டுக்கு 15 லட்சம் டன் CO2 கிடைக்கும்.
  5. இந்த திட்டம் புதுமை மற்றும் சிறப்பிற்காக உலக வங்கி குழு தலைவர் விருதையும் பெற்றுள்ளது மற்றும் பிரதமரின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 

Trending News