வீடு, கார் இல்லை... பிரமதர் மோடியின் சொத்து மதிப்பு... 2019 - 2024 ஓர் ஒப்பீடு!

PM Modi Net Worth: கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து இந்த 5 வருடத்தில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 14, 2024, 09:36 PM IST
  • வாரணாசி தொகுதியில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • அதில் தனக்கு வீடு, கார் ஆகியவை சொந்தமாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
  • பங்குகளிலும் எந்த முதலீடும் செய்யவில்லை.
வீடு, கார் இல்லை... பிரமதர் மோடியின் சொத்து மதிப்பு... 2019 - 2024 ஓர் ஒப்பீடு! title=

PM Modi Net Worth 2019 - 2024 Comparison: 18வது மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தற்போது வரை 4 கட்ட வாக்குப்பதிவுகள் நிறவடைந்துள்ளது. இன்னும் மே 20, மே 26, ஜூன் 1ஆம் ஆகிய தேதிகள் மீதம் உள்ள 3 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறும். ஜூன் 4ஆம் தேதி அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும். மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்க பாஜகவும், பாஜகவை வெளியேற்றி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. 

இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு, பல்வேறு மாநிலங்களில் பல நலத்திட்ட வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தலை சந்தித்துள்ளன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கிறார் எனலாம். காங்கிரஸ் மற்றும் பிற எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்துள்ளது எனலாம். 

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி இம்முறையும் இரண்டு மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறார். கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ள ராகுல் காந்தி, அதன் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். மறுபுறம் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

மேலும் படிக்க |ஆத்தாடி ராகுல் காந்தியின் முதலீடுகளை பாருங்க... நிச்சயம் ஷாக் ஆவீங்க!

வீடு, கார் இல்லை

பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டிலும், 2019ஆம் ஆண்டிலும் இந்த தொகுதியில் போட்டியிட்டே வெற்றி பெற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசியை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார் எனலாம். அந்த வகையில், இன்று அவர் வாரணாசியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவில் தனக்கு கார் மற்றும் வீடு ஏதும் இல்லை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து இந்த 5 வருடத்தில் அவர் சொத்து மதிப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இதில் காணலாம். 

FD மற்றும் முதலீடுகள்

பிரதமர் மோடி அவரது பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் கையில் ரொக்கமாக 52 ஆயிரத்து 920 ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், குஜராத் காந்திநகரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கணக்கில் 73 ஆயிரத்து 304 ரூபாயும், வாரணாசி வங்கியில் 7 ஆயிரம் ரூபாயும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், எஸ்பிஐ வங்கியில் தனது FD-இல் 2.85 கோடி ரூபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசிய சேமிப்பு சான்றிதழ் 9 லட்சத்து 12 ஆயிரத்து 398 ரூபாய் மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னிடம் மொத்தம் 45 கிராமில் 4 தங்க மோதிரங்கள் இருப்பதாகவும், அதன் மதிப்பு 2.67 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சொத்து மதிப்பு - ஓர் ஒப்பீடு

2018-19ஆம் ஆண்டில் தன்னிடம் 11 லட்சத்து 14 ஆயிரத்து 230 ரூபாய் இருந்ததாகவும், 2019-20ஆம் ஆண்டில் 17,20,760 ரூபாய் இருந்ததாகவும், 2020-21ஆம் ஆண்டில் 17,07,930 ரூபாய் இருந்ததாகவுமம், 2021-22ஆண்டு 15 லட்சத்து 41 ஆயிரத்து 870 ரூபாய் இருந்தாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, 2022-2023ஆம் ஆண்டில் 23 லட்சத்து 56 ஆயிரத்து 80 ரூபாய் இருந்தாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். மேலும், 2019ஆம் ஆண்டில் வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில், பிரதமர் மோடிக்கு 3 கோடியே 2 லட்சத்து 6 ஆயிரத்து 889 ரூபாய் சொத்து மதிப்பு இருந்தாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அவருக்கு 1 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரத்து 119 ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரிடம் வீடு, கார், பங்குகளில் முதலீடுகள் என எதுவும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அமேதி தேர்தல் பிரச்சாரம்: குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த பிரியங்கா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News