பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் மின்துறை அமைச்சர் பியூஸ் கோயலின் புதிய முயற்சியால் உலகின் மிக தொன்மையான நகரமான வாரணாசியை வயர்லெஸ் நகரமாக மாற்றும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்தியாவில் புகழ்பெற்ற நகரமும் உலகின் மிக தொன்மையான நகரம் வாரணாசி. அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், மின்கம்பங்கள் இல்லாமல், மின்வயர்களை நிலத்திற்கடியில் புதைத்து முதன் முறையாக வயர்லெஸ் நகரமாக மாறியுள்ளது.
இது தொடர்பாக, வாரணாசி தொகுதியின் பவர்கிரிட் பிரிவின் புராஜெக்ட் மேனேஜர் சுதாகர் குப்தா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது.....!
சியோல் மற்றும் துருக்கி நாட்டின் நகரங்களில் இச்சோதனை மேற்கொண்டபோது மிக கடினமாக இருந்தநிலையில், வாரணாசியில் இந்த முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், அப்போதய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல், வாரணாசியில், மின்வயர்களை நிலத்திற்கு அடியில் புதைத்து மின்சார சேவை வழங்கும் திட்டத்திற்காக ரூ.432 கோடி ஒதுக்கி பணிகளை துவங்கினார்.
இந்த முயற்சியில் முதல் படியாக, அன்சராபாத் பகுதியில் உள்ள கபீர் நகரில் இந்த பணி துவங்கப்பட்டது. 2 ஆண்டுகள் என்ற காலநிர்ணயம் செய்திருந்தநிலையில், பணி நேர்த்தி மற்றும் சீரிய மற்றும் சிறப்பான நடவடிக்கைகளினால், இந்த பணி 2017 டிசம்பரில் நிறைவடைந்தது.
இந்த சேவையை விரிவுபடுத்தும் பொது, 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி சுமார் ரூ.45 ஆயிரம் கோடியை, இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
சாதாரண முறையில் இல்லாமல், தற்போது பூமிக்கடியில் மின்வயர்கள் செல்வதனால், மின்பயனாளர்கள் சந்தித்துவந்த குறைபாடுகள் 42.7 சதவீதம் என்ற அளவிலிருந்து 9.9 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்துள்ளதாக சுதாகர் குப்தா மேலும் கூறினார்.