உத்தரப்பிரதேசத்தில் கால்நடைகளின் நோய் தடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
கோமாரி மற்றும் புரூசெல்லா நோய்களில் இருந்து கால்நடைகளைக் காக்கும் பொருட்டு தேசிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன் தொடக்க விழாவை உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் தேசிய அளவிலான கால்நடைகள் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தர். பின்னர், குப்பையில் இருந்து பிளாஸ்டிக்கை பிரித்தெடுத்து சேகரிக்கும் பெண்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு உதவி செய்தார்.
இவ்விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளைப் பார்வையிட்டார். நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும், அதற்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் குறித்தும், கால்நடை மருத்துவர்களிடம் கலந்துரையாடினார். விழா நடைபெறும் இடத்தில் கால்நடை மருத்துவக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான இயக்கத்தையும் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதை ஒட்டி, அந்த வகை பிளாஸ்டிக்குகளைச் சேகரிக்கும் பெண் ஊழியர்களை மோடி சந்தித்தார். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்கும் பணியில் அப்பெண்கள் ஈடுபட்டிருந்த போது, அவர்களுக்கு பிரதமர் மோடி உதவினார்.
Mathura: Prime Minister Narendra Modi to launch today National Animal Disease Control Programme (NADCP) that aims to eradicate the Foot and Mouth Disease (FMD) and Brucellosis in the livestock pic.twitter.com/nsgfaukZJc
— ANI UP (@ANINewsUP) September 11, 2019
இதைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் எந்திரத்தின் இயக்கத்தை மோடி தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல் திட்டத்தையும் பிரதமர் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில், மதுரா தொகுதியின் எம்.பி. ஹேமாமாலினியும் கலந்து கொண்டுள்ளார்.
இவ்விழாவில், கால்நடைகள், எருமை, செம்மறி ஆடு, ஆடு, பன்றிகள் உள்ளிட்ட 500 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகளுக்கு நோய்க்கு எதிராக தடுப்பூசி போடுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ரூ .12,652 கோடி செலவில் 2024 வரை ஐந்தாண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பசுக்கள், எருமைகள், ஆடுகள் உட்பட 1,750 விலங்குகள் இடம் பெற்றுள்ளது.