டெல்லி பல்கலை. சுவரில் ஐஎஸ் ஆதரவு வாசகங்கள்!

Last Updated : May 28, 2017, 09:40 AM IST
டெல்லி பல்கலை. சுவரில் ஐஎஸ் ஆதரவு வாசகங்கள்!

டெல்லி பல்கலைக்கழகத்தின் வணிக கல்லூரி வளாகத்தில் இருக்கும் சுற்றுச்சுவர்களில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஐஎஸ்-க்கு ஆதரவாக வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அந்த பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் இது குறித்து நேற்று போலீசில் புகாரளித்தார்.

சில மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குறி்ப்பிட்டுள்ளார். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த மவுரிஸ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories

Trending News