தூய்மையான நகரங்கள் பட்டியலில் மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்த இந்தூர் நகரத்துக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது அளித்து பெருமை படுத்தினார்!
இந்தியாவை தூய்மைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்து கணக்கெடுப்பினை மத்திய அரசு நடத்தி பட்டியல் வெளியிட்டது.
President Kovind presents Swachh Survekshan Awards 2019 in New Delhi; says the nation has paid the best tribute to Mahatma Gandhi by making cleanliness a mass movement pic.twitter.com/GAc4BK9WCL
— President of India (@rashtrapatibhvn) March 6, 2019
இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள இப்பட்டியலில் இந்தூர் நகரம் மூன்றாவது முறையாக முதல் இடம் பிடித்துள்ளது. இதனையடுத்து தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு தூய்மையான நகரங்களுக்கான விருதுகளை வழங்கினார்.
மேலும் தூய்மையான சிறிய நகரம் விருது, டெல்லியின் நகராட்சி கவுன்சில் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த கங்கா மாவட்டத்திற்கான விருது, உத்தரகாண்ட் மாநிலத்தின் கவுச்சர் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தூய்மை நகரத்துக்கான விருது பெற்ற இந்தூருக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.