இன்று பெங்களூரு வருகின்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

ANI | Updated: Oct 25, 2017, 07:47 AM IST
இன்று பெங்களூரு வருகின்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

கர்நாடகா சட்டசபையின் 60-வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கலந்துக்கொள்கிறார்.

ANI தகவலின்படி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கும் கர்நாடக சட்டமன்றமான விதன்சௌதாவின் 60 ஆண்டு நிறைவினையொட்டி சிறப்பு நிகழ்ச்சி “விதன்சௌதா 60” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இன்று ஜனாதிபதி கலந்துக்கொண்டு சிறப்பு உரையாற்ற வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

விழாவினையொட்டி ’விதன்சௌதா’ முழுவதும் மின்விளக்குகளால் அளங்கரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகா சட்டசபை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற கமிட்டி தலைவர் முதலியானோர் முன்னதாக திங்களன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து அழைப்பு விடுத்தனர்,

இதனையடுத்து, “விதன்சௌதா 60” நிகழ்ச்சி இன்று(அக்டோபர் 25) நடைபெறும் என்று கர்நாடகா சட்டசபை சபாநாயகர் தெரிவித்தார்!