புதுடெல்லி: அதிகரித்து வரும் பெட்ரோல் விலைகளை போலவே, அதிகரித்து வரும் சமையல் எண்னெய் விலைகளும் மக்களின் பிரச்சனையை அதிகரித்துள்ளன. ஆனால், தற்போது நிம்மதி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் இருந்து சமையல் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாகவும், சில குறிப்பிட்ட எண்ணெய்கள் விலை கிட்டத்தட்ட 20 சதவீதம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"இந்தியாவில் சமையல் எண்ணெய் விலைகள் பரவலாக குறைந்து வருகின்றன. நுகர்வோர் விவகார துறை அளித்துள்ள தரவுகளின்படி, கடந்த ஒரு மாதத்தில் இருந்து, சமையல் எண்ணெய்களின் விலை குறைந்து வருகிறது. சில குறிப்பிட்ட இடங்களில் சரிவு கிட்டத்தட்ட 20% வரை உள்ளது ”என்று அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
குறைந்துள்ள சமையல் எண்ணெய் விலை பட்டியல்
1. மே 7, ‘21 அன்று பாம் ஆயிலின் விலை கிலோவுக்கு ரூ.142 ஆக இருந்தது, இப்போது அதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ .115 ஆக குறைந்தது, அதாவது 19% குறைந்துள்ளது.
2. சூரியகாந்தி எண்ணெயின் விலை மே, 5 ‘21 அன்று ஒரு கிலோவுக்கு ரூ.188 ஆக இருந்தது. இப்போது அதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.157 ஆக குறைந்தது, அதாவது 16% குறைந்துள்ளது.
3. சோயா எண்ணெயின் விலை மே 20, ‘21 அன்று ஒரு கிலோவுக்கு ரூ .162 ஆக இருந்தது, இப்போது மும்பையில் கிலோ ஒன்றுக்கு ரூ .138 ஆக குறைந்தது, இது 15% குறைந்துள்ளது.
4. கடுகு எண்ணெயைப் பொறுத்தவரை, மே 16 ‘21 அன்று விலை கிலோவுக்கு ரூ .175 ஆக இருந்தது, இப்போது அது ஒரு கிலோவுக்கு ரூ .157 ஆக குறைந்தது, இது கிட்டத்தட்ட 10% குறைந்துள்ளது.
ALSO READ | DL Update: ட்ரைவிங் லைசன்ஸ், ஆர்சி தொடர்பாக மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
5. கடலை எண்ணெயின் விலை மே 14, ‘21 அன்று ஒரு கிலோவுக்கு ரூ .190 ஆக இருந்த நிலையில், இப்போது கிலோவுக்கு ரூ.174 ஆக குறைந்தது, அதாவது 8% குறைந்துள்ளது.
6. வனஸ்பதியின் விலை மே 2, ‘21 அன்று ஒரு கிலோவுக்கு ரூ .154 ஆக இருந்தது, இப்போது அது கிலோவுக்கு ரூ .141 ஆக குறைந்தது, இது 8% குறைந்துள்ளது.
சமையல் எண்ணெய் விலைகள் சர்வதேச விலைகள், உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட பல காரணைகளை பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ளலாம். உள்நாட்டு நுகர்வுக்கும் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருப்பதால், இந்தியா கணிசமான அளவு சமையல் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டும். நிரந்தர அடிப்படையில் பிரச்சினையைத் தீர்க்க தொடர்ச்சியான நீண்ட கால நடவடிக்கைகளில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
"இந்தியாவில் அன்றாட தேவைகளில் முக்கிய அங்கமாக விளங்கும் சமையல் எண்ணெய் உற்பத்தியில், இந்தியா தற்சார்பு நிலையை உருவாக்குவதற்கு இந்த நடவடிக்கைகள் பங்களிக்கும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR