புதுடெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (ஜன.,31) முதல் "கெலோ இந்தியா ஸ்கூல் விளையாட்டுகளை" துவங்கிவைக்கின்றார்!
இந்தியாவில் விளையாட்டு வீரர்களை ஆரம்ப புள்ளியில் இருந்தே காணவும், அவர்களை ஊக்குவித்து விளையாட்டு துறையினை ஊக்குவிப்பதன் முயற்சியாகவும் கெலோ விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவில் அனைத்து விளையாட்டுக்களுக்கும் ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்த கெலோ ஆதாரமாய் அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த கெலோ விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளி இளம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். அவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கும், அவர்களை எதிர்கால விளையாட்டு சாம்பியன்களாக மாற்றுவதற்கும் இந்த விளையாட்டு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prime Minister @narendramodi will launch the first Khelo India School Games at Indira Gandhi Indoor Stadium in New Delhi tomorrow.
— PMO India (@PMOIndia) January 30, 2018
இந்த கெலோ விளையாட்டுகள் இன்று (ஜன.,31-2018) துவங்கி வரும் பிப்ரவரி 8-ஆம் நாள் வரை நடைப்பெறுகிறது.
இந்த விளையாட்டுகளில் 17-வயதுகுட்பட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் 16 துறைகளில் போட்டிகள் நடைப்பெறவுள்ளது. அவை வில்வித்தை, தடகள, பேட்மின்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, கபாடி, கோ-கோ, படப்பிடிப்பு, நீச்சல், கைப்பந்து, பளு தூக்குதல் மற்றும் மல்யுத்தம் ஆகியன ஆகும்.
இந்தியாவின் இளம் விளையாட்டு வீரர்களை கண்டறியும் தேடலாக இந்த விளையாட்டுகள் அமையவுள்ளது!