பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1.77 பில்லியன் பணம் மோசடி!

பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளை அலுவலகத்தில் சுமார் 1.77 பில்லியன் மோசடி பரிவர்த்தனைகளை கண்டறிந்துள்ளது.

Last Updated : Feb 14, 2018, 02:29 PM IST
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1.77 பில்லியன் பணம் மோசடி! title=

மும்பை: மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 1.77 பில்லியன் அளவுக்கு சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்தது, கண்டுபிடிக்கப்பட்டதாக பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியுள்ளது. 

இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்ட அறிக்கை: மும்பையில் உள்ள வங்கி கிளையில், சட்ட விரோதமாகவும், உரிய அங்கீகாரம் பெறாமலும் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பலர் பயனடைந்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே பணிப்பரிவர்த்தனை செய்யப்பட்டது. 

இவ்வாறு முறைகேடாக 1.77 பில்லியன் அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் விசாரணை அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பரிவர்த்தனை நடப்பதில் வங்கி நிர்வாகம் உறுதியாக உள்ளது. இந்த தகவல் செபி அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதும், பங்கு சந்தையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் சரிவை சந்தித்தன.

Trending News