கொரோனா சோதனை கருவி வாங்குவதில் தாமதம் செய்துவிட்டோம்: ராகுல்!

கொரோனோ வைரஸ் சோதனை உபகரணங்கள் வாங்குவதில் இந்தியா தாமதம் செய்துவிட்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்!!

Updated: Apr 14, 2020, 06:12 PM IST
கொரோனா சோதனை கருவி வாங்குவதில் தாமதம் செய்துவிட்டோம்: ராகுல்!

கொரோனோ வைரஸ் சோதனை உபகரணங்கள் வாங்குவதில் இந்தியா தாமதம் செய்துவிட்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கான வெகுஜன சோதனை கருவி அதன் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ஆனால், நாடு தற்போது "விளையாட்டில் எங்கும் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், நாடுதழுவிய ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலேயே கரோனா பரிசோதனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க இந்தியா தாமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா தாமதித்ததால் இன்று பரிசோதனை கருவிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், 10 லட்சம் பேருக்கு 149 என்ற வீதத்திலேயே இந்தியாவில் பரிசோதனை கருவிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது... கொரோனா நோய் தொற்றிற்கான சோதனை உபகரணங்கள் வாங்குவதில் இந்தியா தாமதம் செய்துவிட்டது. அதனால், தற்போது, சோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

மேலும், ஒரு மில்லியன் இந்தியர்களுக்கு வெறும் 149 சோதனைகள் மட்டுமே செய்யப்படுகிறது. லாவோஸ்(157), நைஜர்(182) மற்றும் ஹோண்டரஸ்(162) ஆகிய நாடுகளின் நிலையில்தான் உள்ளோம். கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு அதிக அளவில் பரிசோதனை செய்வது முக்கியம். ஆனால் அந்த முயற்சியில் தற்போது நாம் இல்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.