அமித்ஷா விவகாரத்தில் ராகுலை விடுவித்தது தேர்தல் ஆணையம்!

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா "கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்" என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியதில், நடத்தை விதி மீறல் ஏதும் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!

Last Updated : May 2, 2019, 10:10 PM IST
அமித்ஷா விவகாரத்தில் ராகுலை விடுவித்தது தேர்தல் ஆணையம்! title=

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா "கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்" என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியதில், நடத்தை விதி மீறல் ஏதும் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!

முன்னதாக மத்திய பிரதேச மாநிலம் பிரச்சார கூட்டத்தின் போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ‘கொலை குற்றம் சாட்டப்பட்டவர்’ என பேசினார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் விதிகளை மீறியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. 

ராகுலின் பேச்சுக்கு கருத்து தெரிவித்த அமித்ஷா., அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொய் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ராகுல் காந்தியின் சட்ட அறிவு பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை என பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் மீது தொடுக்கப்பட்ட புகார் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்ட பின்னர் தற்போது ராகுல் காந்தி தேர்தல் விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜபல்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பியிருந்த ராகுல் காந்தியின் முழு பேச்சு விவரமும் பரிசீலிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து, இதில் நடத்தை விதி மீறல் எதுவும் இல்லை என தேர்தல் ஆணையம் முடிவுக்கு வந்தது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சொராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி ஆகியோர் காவல்துறையினரின் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் அமித் ஷா மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அரசியல் உள்நோக்கத்துடன் அவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும், அவருக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என்றும் குறிப்பிட்டு, கடந்த 2014-ஆம் ஆண்டு தனி நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News