கேரளா வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டி?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் இருந்து எதிர்வரும் மக்களவை தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Mar 23, 2019, 04:40 PM IST
கேரளா வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டி? title=

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் இருந்து எதிர்வரும் மக்களவை தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

கேரளா காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முக்கிய தலைவர்கள் ‘ராகுல் காந்தி கேராளவில் இருந்து போட்டியிட விரும்புவதாக’ தெரிவித்துள்ளனர். கேரளா காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் வேண்டுகோள் குறித்து பரிசீலிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் இருந்தும் போட்டியிடலாம் என தெரிகிறது.

கேரளாவின் வயநாடு காங்கிரஸ் கோட்டையாக கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் ஏற்கனவே தென் இந்தியாவில் இருந்து போட்டியிட்டுள்ளனர், எனினும் கேரளாவில் இருந்து இதுவரை போட்டியிடவில்லை. எனவே வரும் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தென்னிந்தியாவில் போட்டியிட வைக்க வேண்டும் என தென்னிந்திய காங்கிரஸ் கமிட்டிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

முன்னதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி., தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவரைத் தொடர்ந்து கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா அவர்கள் ஒரு படி மேல் சென்று ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி அமைய உள்ளதாகவும், ராகுல் தான் அடுத்த பிரதமர்’ எனவும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் அடுத்த பிரதமரான ராகுல் காந்தி கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமைய்யா வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் தற்போது கேரளா காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News