#SaveRTI: உன்மையை மறைக்க பார்கிறது பாஜக - ராகுல் காந்தி!

பொதுமக்கள் உண்மையை அறிய விரும்பும்போது, பாஜக அதனை மறைக்க முயற்சிக்கின்றது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்!

Last Updated : Jul 19, 2018, 02:04 PM IST
#SaveRTI: உன்மையை மறைக்க பார்கிறது பாஜக - ராகுல் காந்தி! title=

பொதுமக்கள் உண்மையை அறிய விரும்பும்போது, பாஜக அதனை மறைக்க முயற்சிக்கின்றது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்தய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த செயல்பாடானது பயனளிக்காது, பொதுமக்களின் உரிமையினை பறிப்பது போன்றே இந்த செயல்பாடு அமையும் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம் ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகின்றது. இதற்கான வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

"நாட்டின் குடிமகன் ஒவ்வொருவரும் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், பாஜக உண்மையை மறைக்க விரும்புகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் தேவை அற்றது. இந்த செயலானது மக்களுக்கு பயனில்லாதது. இந்தத் திருத்தத்திற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரும் திருத்த மசோதாவை, மாநிலங்கள் அவையின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால், பெரும்பாலான கட்சித் தலைவர்களும், மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டுவரும் திருத்தம் என்பது அந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Trending News