கேரளா வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி! 

Last Updated : Apr 4, 2019, 12:20 PM IST
கேரளா வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!  title=

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி! 

மக்களவை தேர்தலில் கேளரா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவை இன்று ராகுல்காந்தி தாக்கல் செய்கிறார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் பாரத் தர்ம ஜனசேனா வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேசம் அமேதி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். இரண்டாவதாக வயநாடு லோக்சபா தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என கேரளா காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து இன்று கேரளா வரும் ராகுல், கோழிக்கோட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை வயநாடு சென்று தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவருடன் பிரியங்கா, மற்றும் கேரளா காங்கிரஸ் தலைவர்கள் கே.சி. வேணுகோபால், முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் செல்கின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில்; கேரளாவில் வயநாடு தொகுதியின் ஒரு எல்லை, தமிழகத்தின், நீலகிரி மாவட்டத்திலும், மற்றொரு எல்லை, கர்நாட காவிலும் உள்ளது. இங்கு ராகுல் போட்டிடுவது, கேரளா, தமிழகம், கர்நாடகாவில் காங்கிரசின் எழுச்சிக்கு பெரும் உதவி செய்யும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் போட்டியிடும் வேர்பாளர்கள் குறித்து BJP நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் கேரளா வைச்சேர்ந்த ஒருவரும் குஜராத் தைச்சேர்ந்த இருவரும் இடம்பிடித் துள்ளனர். இதில் மலையாள நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபி (திருச்சூர்), சாரதா பென் படேல் (மேசனா) மற்றும் தர்ஷனா ஜர்தோஷ் (சூரத்) ஆகிய 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இத்துடன் பாஜக சார்பில் இதுவரை 377 வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். 

திருச்சூர் தொகுதியில் இடதுசாரி ஜன நாயக முன்னணி சார்பில் ராஜாஜி மேத்யூ தாமஸும் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார் பில் டி.என்.பிரதாபனும் போட்டியிடுகின்ற னர். இவர்களுக்கு எதிராக பாஜக சார்பில் சுரேஷ் கோபி களமிறக்கப்பட்டுள்ளார். 

 

Trending News