காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கைலாச யாத்திரை மேற்கொண்டார். அந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது...!
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி நாட்டு நன்மை வேண்டி சிவ பெருமான் அருளைப் பெற ராகுல் காந்தி கைலாஷ் யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை 12 முதல் 15 நாட்கள் நீடிக்கு எனவும் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் அனைத்தும் அவர் யாத்திரையில் எடுத்தது அல்ல. கூகுளில் இருந்து எடுத்து பதிவிடப்பட்டது என பலரும் பல கருத்துகளை தெரிவித்துவன்தனர்.
. @RahulGandhi Are you downloading pics from the internet and tweeting? Are you really at Mansarovar or some place else? pic.twitter.com/mkQuCJiXA2
— Priti Gandhi (@MrsGandhi) September 5, 2018
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாச யாத்திரையில் சக பக்தர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. புகைப்படங்களுடன் வீடியோக்களும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவர் தனது ட்விட்டரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனைத்தும் யாத்திரையில் எடுக்கப்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Congress President Rahul Gandhi during #KailashMansarovarYatra with other pilgrims pic.twitter.com/hMLqL6KzOw
— ANI (@ANI) September 7, 2018
யாத்திரை செல்ல இருப்பதால் அவர் அசைவம் உணவுகளை தவிர்த்ததாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது...!
#WATCH:Congress President Rahul Gandhi during #KailashMansarovarYatra with other pilgrims pic.twitter.com/G4XUjss0zu
— ANI (@ANI) September 7, 2018