புதுடெல்லி: ரயிலில் விற்கப்படும் உணவு பொருள்களின் விலை பட்டியலை இந்திய ரயில்வே அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ரயில்வேத்துறை கீழ் இயங்கும் ஐ.ஆர்.சி.டி.சி கேன்டீன் விற்பனையாளர்கள் தண்ணீர், டீ, காபி, சாப்பாடு உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பதாக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம், டிவிட்டர், இ-மெயில் உள்ளிட்ட தளங்களில் புகார்கள் குவிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஐ.ஆர்.சி.டி.சி மூலம் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருள்களின் விலை பட்டியலும் ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Know the rate list of @IRCATERING in case of any discrepancies must reported to @RailMinIndia: We work for you 24x7 #Awareness pic.twitter.com/3aC59jakWI
— Ministry of Railways (@RailMinIndia) March 21, 2017