தீவிரமாகும் பருவமழை; ஏழு மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: IMD

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Last Updated : Aug 4, 2019, 11:02 AM IST
தீவிரமாகும் பருவமழை; ஏழு மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: IMD title=

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

ஆந்திரப் பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரபிக் கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுத்தப்படுகின்றனர். தற்போது மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  

கோவா, மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும், கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் நாளை முதல் மழை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இது தவிர வடக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது" என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து நாட்களுக்கு கோவாவில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் IMD தெரிவித்துள்ளது. "மழைக்காலம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மகாராஷ்டிரா-கோவா கடற்கரைக்கு துறைமுகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும், அம்மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது" என்று வானிலை அமைப்பு ஒரு ஆலோசனை வழங்கியது. இதேபோன்ற எச்சரிக்கை ஹிமாச்சல பிரதேசத்திற்கும் வழங்கப்பட்டது, இது திங்களன்று அதிக மழை பெய்யக்கூடும்.

ஒடிசாவில் உள்ள ஐந்து மாவட்டங்கள் - மல்கன்கிரி, கோராபுட், நபரங்பூர், கலஹந்தி மற்றும் நுவாபாடா ஆகிய மாநிலங்கள் கடும் மழை பெய்து வருவதால் மாநிலத்தில் வெள்ளம் போன்ற சூழ்நிலையை உருவாக்க வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் பெய்த மழையை காரணம் காட்டி அடுத்த இரண்டு நாட்களுக்கு மல்கன்கிரியில் பள்ளிகள் மூடப்படும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

Trending News