பாதுகாப்பு கணக்குதுறை மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வித்தியாசமான கோரிக்கை

Expenditure On Defense: பாதுகாப்பு அமைச்சகம் குறைவாக செலவு செய்திருந்தால், அதிக செலவு செய்ய பரிந்துரைக்கவும்'  கட்டுப்பாட்டாளர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 14, 2022, 05:14 PM IST
  • இந்தியாவின் போர்த் தயார்நிலையை அதிகரிக்க அதிக செலவு செய்ய வேண்டும்
  • பாதுகாப்பு அமைச்சகம் குறைவாக செலவு செய்திருந்தால், அதிக செலவு செய்ய பரிந்துரைக்கவேண்டும்
  • வரவு செலவுத் திட்டத்தில் வீண்விரயம் ஏற்படக் கூடாது என ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
பாதுகாப்பு கணக்குதுறை மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வித்தியாசமான கோரிக்கை title=

புதுடில்லி: இரண்டு நாள் கட்டுப்பாட்டாளர்கள் மாநாட்டில், இந்தியாவின் போர் தயார்நிலையை மேம்படுத்த, பாதுகாப்பு கணக்கு துறையை (டிஏடி) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். சிங் திங்கள்கிழமை (நவம்பர் 14) புது தில்லியில் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 5.25 லட்சம் கோடி பாதுகாப்பு பட்ஜெட் தொகையை திறமையாகவும், பகுத்தறிவு ரீதியாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார். வரவு செலவுத் திட்டத்தில் வீண்விரயம் ஏற்படக் கூடாது என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்புத் துறையில் அதிக செலவு செய்வதை அமைச்சகம் உறுதி செய்யும் என்று சிங் கூறினார், இதனால் இந்தியாவுக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டாளர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் உரை
“பாதுகாப்பு அமைச்சகம் குறைவாகச் செலவு செய்திருந்தால், அதிகமாகச் செலவழிக்குமாறு பரிந்துரை செய்யுங்கள். இல்லையேல் அடுத்த பட்ஜெட்டில் சிக்கல் ஏற்படும் என்று பாதுகாப்புக் கணக்குத் துறைக்கு நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். பாதுகாப்பு பட்ஜெட் ரூ.5.25 லட்சம் கோடி, 6 லட்சம் கோடிக்கு மேல் அது போக வேண்டும். . இதற்கு, நம்மிடம் உள்ள நிதியை, உரிய நேரத்தில் செலவழிக்க வேண்டும். எங்கள் கணக்காளர்களுக்கும் இந்த பொறுப்பு உள்ளது. இந்த ஆலோசனையை, அவ்வப்போது வந்து செல்லும் அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும்,'' என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது உரையின்போது கேட்டுக் கொண்டார். 

பாதுகாப்பு பட்ஜெட்
பாதுகாப்புக் கணக்குத் துறையானது பாதுகாப்பு அமைச்சகத்திற்கு (MoD) நிதியை ஒதுக்குகிறது. இதனை வேறுவிதமாகக் கூறினால், ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட்டை உருவாக்குவது, பாதுகாப்புக் கணக்குத் துறை ஆகும்.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் பணியாளர்களின் சம்பளத்திற்கான கொடுப்பனவுகள் மற்றும் பிற செயல்பாடுகளுடன் ஓய்வூதிய கொடுப்பனவுகள் அடங்கும். 2022-23 மத்திய பட்ஜெட்டுக்காக, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ரூ.5.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 1.19 லட்சம் கோடி ஓய்வூதியத் தொகைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | திகில் அனுபவத்தை கொடுக்கும் இங்கிலாந்து சிறை! கேள்விபட்டிருக்கிறீர்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News