"ராமர் கோவில் வேலை நிச்சயம் செய்யப்படும்"; RSS தலைவர் மோகன் பகவத்!

ஒருவருக்கு பொறுப்பை வழங்கியுள்ளோம், ஆனாலும் அதில் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும் என ராமர் கோயில் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்!!

Last Updated : May 27, 2019, 12:30 PM IST
"ராமர் கோவில் வேலை நிச்சயம் செய்யப்படும்"; RSS தலைவர் மோகன் பகவத்! title=

ஒருவருக்கு பொறுப்பை வழங்கியுள்ளோம், ஆனாலும் அதில் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும் என ராமர் கோயில் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்!!

ராமர் கோயில் - பாபர் மசூதி தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றம் நியமித்த மத்தியஸ்தர் குழுவின் விசாரணையில் உள்ளது. பொதுத்தேர்தலில் ராமர் கோயில் விவகாரம் பாஜகவின் முக்கிய ஆயுதமாக இருந்தது. மதரீதியிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ள கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறிய பின்பும், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் ராமர் கோயில் விவகாரம், முத்தலாக ஆகியவற்றை கூறி வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

இந்நிலையில் RSS தலைவர் மோகன் பகவத் உதய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது “ராமர் கோயிலுக்கான வேலை மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இது நமது பணி, நாம் தான் இதனை செய்ய வேண்டும். இந்த பொறுப்பை நாம் ஒருவரிடம் வழங்கியுள்ளோம், ஆனாலும் அதில் நாம் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

அயோத்தியில் உள்ள ராம் கோயிலின் கட்டுமானப் பணிகளை விசாரிக்க காஷ்மீர் விவகாரத்திற்கு நேரம் வந்து விட்டது என்று பி.ஜே.பிக்கு செய்தி அனுப்பும் முயற்சியில் அவரது இரகசிய அறிக்கையின் மூலம் பக்வாத் முயற்சி செய்தார். ராம் கோவில் பிரச்சினை தற்போது உச்சநீதிமன்றத்திற்கு முன் நிலுவையில் உள்ளது. ஆனால் ராம கோவில் கட்டுமானத்தை நிறைவு செய்ய தேவையான எல்லா வாய்ப்புகளையும் கட்சி பரிசோதிக்கும் என்று அதன் 2019 தேர்தல் அறிக்கையில் 'சங்கல்ப் பாத்ரா'யில் BJP குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News