மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜனாதிபதியின் ஆட்சியை பரிந்துரைத்ததை உறுதிப்படுத்தினார் மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங்

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Nov 12, 2019, 06:24 PM IST
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல்
File photo

17:36 12-11-2019
மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யரி (Bhagat Singh Koshyari) பரிந்துரையை அடுத்து, மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சியை அமல் படுத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.


16:15 12-11-2019
மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யரி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரைத்ததாக தகவல்கள் கூறப்பட்ட நிலையில், ராஜ் பவன் செய்தித் தொடர்பாளர், அந்த தகவலை மறுத்துள்ளார். இருப்பினும், விரைவில் மகாராஷ்டிரா கவர்னர் ஜனாதிபதியின் ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கும் அறிக்கையை வெளியிட்டார்.


15:42 12-11-2019
முதலில் மகாராஷ்டிராவில் (Maharashtra) குடியரசுத் தலைவர் ஆட்சியை (The Present Role) அமல் படுத்தப்பட்டது என செய்தி வெளியானது. அந்த செய்தியை ஆளுநர் மாளிகை மறுத்தது. சிறிது நேரம் கழித்து ஆளுநர் ஒரு அறிக்கை வெளியிட்டு ஜனாதிபதி ஆட்சி குறித்து உறுதிப்படுத்துகிறார். மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி குறித்த குழப்பம் இறுதியாக நீக்கப்பட்டது.


15:31 12-11-2019
மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யரி (Bhagat Singh Koshyari) ராஜ் பவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஜனாதிபதியின் ஆட்சியை பரிந்துரைத்ததை உறுதிப்படுத்தினார். தனது நடவடிக்கைகள் சட்டப்படி என்று அவர் அதில் கூறியுள்ளார். 

 


15:22 12-11-2019
மகாராஷ்டிராவில் (Maharashtra) குடியரசுத் தலைவர் ஆட்சியை (The Present Role) அமல் படுத்தப்பட்டது என்று செய்திகள் வெளியானதில் உண்மை இல்லை. அப்படி எதுவும் அமல்படுத்தப் படவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது


புதுடில்லி: குடியரசுத் தலைவர் ஆட்சியை (The Present Role) அமல் படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவையின் முக்கியமான கூட்டம் மகாராஷ்டிராவில் (Maharashtra) இன்று நடைபெறுகிறது. சிவசேனாவை (Shiv Sena) ஆதரிப்பது தொடர்பான பிரச்சினையில் காங்கிரசுக்கும் என்சிபி இடையிலான தாமதத்தால், மகாராஷ்டிரா ஆளுநர் தரப்பில் இருந்து ஜனாதிபதியின் ஆட்சியை பரிந்துரைக்கப் பட்டது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றது. முந்தைய சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 9 ஆம் தேதியுடன் முடிந்தது. முன்னதாக நேற்று, ஆளுநர் இன்று இரவு 8.30 மணி வரை ஆதரவைத் திரட்ட பாஜக மற்றும் சிவசேனாவுக்கு நேரம் வழங்கியுள்ளார். ஆனால் நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ ஒரு நிலையான அரசாங்கத்தை மாநிலத்தில் அமைப்பதற்கு ஆதரவாக இல்லை என்று ஆளுநர் கருதுவதால், அதனால் ஜனாதிபதியின் ஆட்சியை பரிந்துரைத்துள்ளார்.

இருப்பினும், ஜனாதிபதியின் ஆட்சி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்பட வில்லை. இதனையடுத்து, மகாராஷ்டிராவின் அரசியல் நெருக்கடி குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் மோடி தனது இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இன்று பிரதமர் மோடி பிற்பகல் பிரேசில் செல்ல உள்ளார். அதற்கு முன் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

அக்டோபர் 24 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, இன்றுடன் 19 நாட்களுகள் ஆகியும், மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சியும் இதுவரை தேவையான பெரும்பான்மையை ஆளுநரிடம் முன்வைக்க முடியவில்லை. மகாராஷ்டிராவின் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் கிடைத்தன. 

மகாராஷ்டிரா தேர்தலுக்கு முந்தைய பாஜக - சிவசேனா கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைத்தது. ஆனால் சிவசேனாவின் 50-50 சூத்திரத்திற்கான கோரிக்கையின் காரணமாக இந்த கூட்டணி இறுதியில் முறிந்தது. அதன் பிறகு சிவசேனா என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணியுடன் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் கடைசி தருணம் வரை காங்கிரஸின் ஆதரவு குறித்த குழப்பம் காரணமாக ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடித்துள்ளது.

மகாராஷ்டிராவின் ஆளுநர் பி.எஸ். கோஷ்யரி திங்கள்கிழமை மாலை தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) மாநிலத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைக்க அழைத்தார். கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் ஊடகவியலாளர்களிடம், "ஆளுநர் எங்களை அழைத்தார், எங்களுக்கு ஒரு அழைப்புக் கடிதம் வழங்கப்படும் என்று சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. நாளை காங்கிரஸுடன் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான முறைகள் குறித்து விவாதிப்போம்" என்று கூறினார்.

நேற்று மாலை ராஜ் பவனுக்கு சென்ற சிவசேனா கட்சி, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமைக் கூறியது. மேலும் பதவியேற்க 48 மணிநேர கால நீட்டிப்பைக் கோரியது. ஆனால் அவர்களின் கோரிக்கைகளை, அம்மாநில ஆளுநர் பகத் சிங் (Bhagat Singh Koshyari) நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.