)
Vitamin B12 Deficiency: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல வித ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. இவற்றில் வைட்டமின்களும் மிக முக்கியமானவை. பல வகையான வைட்டமின்கள் நமது பல வகையான தேவைகளை பூர்த்தி செய்கின்றன. இவற்றில் வைட்டமின் பி12 உடலில் பல முக்கிய பணிகளை செய்கின்றது.
வைட்டமின் பி-12 வைட்டமின்களின் அரசானகவும் கருதப்படுகிறது. இந்த வைட்டமின் நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி-12 குறைந்தால், கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது. இந்த வைட்டமின் குறைபாடு காரணமாக இரத்தம் உருவாகாத நிலை ஏற்படக்கூடும்.
வைட்டமின் பி-12 டிஎன்ஏவுக்கும் மிகவும் முக்கியமானது. இதனை பல்வேறு உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் நாம் பெற முடியும். எனினும், இதன் குறைபாடு அதிகமாகி, நிலைமை மோசமாகிவிட்டால், மருத்துவ உதவியை நாட வேண்டும். கடுமையான குறைபாடு இருந்தால், மாத்திரைகள், சப்ளிமெண்ட்ஸ் மற்றும் ஊசி மூலம் வைட்டமின் பி12 உடலுக்கு வழங்கப்படுகிறது. சில இயற்கையான வழிகளிலும் வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்யலாம். 21 நாட்களில் உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய உதவும் 5 சிவப்பு உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்,
வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய உதவும் 5 சிவப்பு உணவுகள்:
பீட்ரூட் (Beetroot)
பீட்ரூட் ஒரு வேர் காய். இதை பச்சையாகவும் சாப்பிடலாம். உடலில் இரத்தக் குறைபாட்டைப் போக்க இது மிகவும் உதவியாக இருக்கும். வைட்டமின் பி-12 குறைபாட்டை சரி செய்ய தினமும் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது.
சிவப்பு குடைமிளகாய் (Red Capsicum)
வைட்டமின் பி-12 குறைபாட்டை சிவப்பு குடைமிளகாய் கொண்டு சரி செய்ய முடியும். கேப்சிகம் அல்லது பெல் பெப்பர் சாப்பிடுவதன் மூலமும் குணப்படுத்தலாம். சிவப்பு குடைமிளகாய் வைட்டமின் சி இன் மூலமாகவும் உள்ளது. இது இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதை சாலடாக செய்து சாப்பிடடலாம் அல்லது சமைத்தும் உட்கொள்ளலாம்.
தக்காளி (Tomato)
வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் தக்காளியையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது வைட்டமின் பி-12 இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. வெறும் வயிற்றில் தக்காளி சாலட், சூப் அல்லது ஜூஸ் குடிப்பது நன்மை பயக்கும்.
மாதுளை (Pomegranate)
மாதுளை சாப்பிடுவது இரத்த சோகையை அகற்ற உதவுகிறது. இது வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்யவும் உட்கொள்ளப்படுகின்றது. மாதுளையை வெறும் வயிற்றில் சாப்பிடுவது வைட்டமின் பி12 குறைபாட்டைப் போக்க உதவுகிறது. மாதுளையை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன.
சிவப்பு இறைச்சி (Red Meat)
அசைவம் சாப்பிடுபவர்கள் சிவப்பு இறைச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வைட்டமின் பி-12 குறைபாட்டை சிவப்பு இறைச்சி சாப்பிடுவதன் மூலமும் சரி செய்ய முடியும். இருப்பினும், அதை குறைந்த அளவுகளில் சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ