ஒவ்வொரு சூப்பர் ஹீரோவும் "நான் ஹீரோ" என்று சொல்லிக்கொள்வதில்லை. அவர்கள் அமைதியாக சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த சூப்பர் ஹீரோக்களை மக்கள் முன் கொண்டு வந்து அவர்களை கவுரவிக்கும் முன்னெடுப்புகளை டேர் டு ட்ரீம் சிறப்பாக செய்து வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) உண்மையான சூப்பர் ஹீரோக்களைக் கொண்டாடும் விதமாக டேர் டு ட்ரீம் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு, டேர் டு ட்ரீம் அவார்ட்ஸ் சீசன் 4 கொண்டாட்டத்தை ஜீ பிசினஸ் (Zee Business) உடன் இணைந்து SAP India நடத்துகிறது.
கொரோனா என்ற கொடிய தொற்றுநோய் காரணமாக பல சவால்கள் அனைவருக்கும் சந்திக்க வேண்டியிருந்தது. லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக வணிகங்கள் வருவாய் ஈட்டுவதில் கடினமான சிக்கலை எதிர்கொண்டன.
ஆயினும்கூட, இந்தச் சவால்களைத் தாண்டி, தங்கள் மனஉறுதியுடன் சவால்களை எதிர்கொண்ட சிலர் இருந்தனர். நாட்டின் பொருளாதரத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல தங்கள் போராட்டக் குணத்தால் முன்னெடுத்து, வழி நடத்தும் எழுச்சியூட்டும் தலைவர்களை கவுரவிக்கு வருகிறது டேர் டு ட்ரீம் விருதுகள் 2022.
"எதுவும் சாத்தியம்" என்ற சொல்லை மட்டும் நம்பாமல் அதை நிரூபித்து மற்றவர்களுக்கு உத்வேகமாக இருப்பவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.
டேர் டு ட்ரீம் விருதுகள் 2022க்கான தேர்வு:
எங்களின் மதிப்பிற்குரிய ஜூரி ஆஃப் டேர் டு ட்ரீம் விருதுகள் பரிந்துரை செயல்முறையின் மூலம் வெற்றியாளர்களை இறுதி செய்யப்படும். பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் விருதுக்கான வெற்றியாளர்களை அதன் பின்னணியில் இருந்து இறுதி செய்யப்படும்.
புதுமை, தொழில்நுட்பம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் வாடிக்கையாளர்களை கவர்வது போன்றவற்றில் முன்னோடிகளாக இருந்த வணிகத் தலைவர்களை நடுவர் மன்றம் அங்கீகரிக்கும். தலைமை என்பது ஒரு செயல், அது வெறும் பதவி அல்ல என்பதை நிரூபிப்பவர்களைக் கௌரவிப்பதே அவர்களின் நோக்கம்.
விருது தேர்வு குழுவில் அஜய் தாக்கூர் (BSE SME & Startups), சுமன் சௌத்ரி, நிர்வாக இயக்குனர் & தலைமை பகுப்பாய்வு அதிகாரி (Acuité Ratings & Research Ltd), அனில் சிங்வி, நிர்வாக ஆசிரியர் (ZEE Business) இடம் பெற்றுள்ளனர். அவர்களை விருது தேர்வு சரிபார்ப்பு மற்றும் செயல்முறை கூட்டாளர்களாக அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த முயற்சியைப் பற்றி சுமன் சௌத்ரி பேசுகையில், “உலகளவில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research and Development) திட்டங்களுக்கான முதல் தேர்வாக இந்தியா தொடர்ந்து இருந்துவருகிறது, டேர் டு ட்ரீம் முன்முயற்சி SME-க்கள் மற்றும் MSME-களுக்கு ஊக்கமளிப்பது மட்டுமல்ல, India.Inc இன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றார்.
அனில் சிங்வி கூறுகையில், "எஸ்ஏபியுடன் இணைந்து தொடங்கப்பட்ட டேர் டு ட்ரீம் விருது முயற்சி என்பது, தங்கள் அயராது பணியின் மூலம் சாதனை புரிந்த மில்லியன் கணக்கான இந்தியர்களின் அசாதாரணக் கதைகளை வெளிச்சத்துக்கு வர உள்ளது. இந்த முயற்சி மூலம் அவர்களுக்கு அதிக அங்கீகாரம், பாராட்டு மற்றும் வெற்றியைக் கொண்டுவரும் என்று நம்புகிறோம் என்றார்".
இந்த விருது நிகழ்ச்சி குறித்து அஜய் தாக்கூர் கூறுகையில், “டேர் டு ட்ரீம் விருது அங்கீகாரம் என்பது வெறும் வெற்றி பெற்ற தலைவர்களுக்கு மட்டும் வழங்குவது அல்ல. அவர்கள் புதிய இந்தியாவின் முன்னோடிகள் ஆவார்கள். எங்கள் விருது தேர்வு செயல்முறை மூலம் இந்தியாவின் சிறந்த முன்னோடிகளை கௌரவிப்பதே எங்கள் நோக்கம். இதன்மூலம் ஸ்டார்ட்அப் தொழில் வளர்ச்சியடையவும், பிரகாசிக்கவும் இதுவே சிறந்த நேரமாகும். வெற்றி பெற்றவர்கள் தங்கள் அனுபவங்களை மற்றவர்கள் முன்னிலையில் பேசலாம். தங்கள் பெயர்களை பரிந்துரை செய்வார்கள் என்று நம்புகிறோம். வானமே எல்லை!"என்றார்.
இது உங்கள் நேரம்:
உலகத்துடன் பகிர்ந்து கொள்ள உத்வேகம் அளிக்கும் கதை உங்களிடம் இருந்தால் அல்லது அவ்வாறு செய்ய விரும்பும் ஒருவரை மனதில் வைத்திருந்தால், இது உங்களுக்கான சரியான வாய்ப்பு!
தொழில்முனைவோர் உணர்வைக் கொண்டாடும் இந்த நிகழ்வில் அங்கீகரிக்கப்படுவதற்கு உங்களை, உங்களுக்குத் தெரிந்தவர் அல்லது உங்கள் நிறுவனத்தை நீங்கள் பரிந்துரைக்கலாம்.
நீங்கள் ஒரு வணிகத் தலைவராக இருந்தால், உங்களை அல்லது உங்கள் நிறுவனத்தை மிகப்பெரிய தொழில்முனைவோர் விருதுக்கு பரிந்துரைக்கும் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!
தலைமைத்துவத்தையும் புதுமையையும் கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்க, 29 அக்டோபர், 2022க்கு முன் உங்கள் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க Dare to Dream Awards இணையதளத்தைப் பார்வையிடவும். மற்ற தொழில்துறை தலைவர்களைச் சந்திக்கவும், உங்கள் சிந்தனை மற்றும் புதுமை செயல்பாட்டிற்காக அங்கீகரிக்கப்படவும் இந்த அற்புதமான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். SAP.com
பரிந்துரை செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ