மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் தனது ஆட்சியை இழந்ததுடன், மிசோரம் மற்றும் தெலுங்கானவிலும் தோல்வி அடைந்துள்ளது. அதன்பிறகு தோல்விக்கான காரணங்களைக் கருத்தில் கொண்டு பிஜேபி ஆலோசனை செய்து வருகிறது. இதற்கிடையில், பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு புதிய முயற்ச்சியை மோடி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மோடி அரசு இரண்டு பெரிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது. அதில் ஒன்று ஏழை மக்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புகளை வழங்கப்படும் என்றும், மற்றொன்று 99 சதவிகத பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18% கீழ் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளது.
இலவசமாக எரிவாயு இணைப்பு:
அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் கீழ், முக்கியமாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச LPG இணைப்பு வழங்குவதாகும். இத்திட்டத்தின் கீழ் இதுவரை எரிவாயு இணைப்பு வாங்கதவர்களுக்கு இலவச எல்.பி.ஜி. இணைப்பு வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் ஒரு இணைப்புக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு 1,600 ரூபாய் மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. இந்த மானியம் மூலம் சிலிண்டர் மற்றும் இணைப்பு கட்டணங்களை மத்திய அரசு வழங்கும். வாடிக்கையாளர்கள் வெறும் அடுப்புகளை வாங்க வேண்டும் மட்டும் பணம் தரவேண்டும். அதுவும் ஏழைகளின் நிதி சுமையை குறைக்க, மாத தவணை முறையில் அடுப்பு மற்றும் நிரப்பப்பட்ட சிலிண்டருக்கான பணத்தை செலுத்தலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
18 சதவிகித ஜி.எஸ்.டி வரி:
ஜி.எஸ்.டி அமைப்பு நாட்டில் ஒரு பெரிய அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை ஜி.எஸ்.டி. வரி எளிமையானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் வேலை செய்து வருகிறோம். 99 சதவிகிதம் பொருட்கள் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல ஜி.எஸ்.டி.யில் 28 சதவீத வரிகள், ஆடம்பர பொருட்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே இருக்கும் என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.