கேரள மாநிலம் மலம்புழாவில் டிரக்கிங் சென்றபோது பாறையில் சிக்கிய பாபு என்ற இளைஞனை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளபப்ட்ட நிலையில், அவர் இன்று வெற்றிகரமாக மீட்கப்பட்டார்.
மூன்று நாட்களாக ஆபத்தான செங்குத்தான மலையில் சிக்கிக் கொண்டிருந்த கேரள இளைஞர் பாபு மீட்கபட்டார். அவர் மீட்கப்பட்ட பிறகு பேசிய வீடியோ வைரலாகிறது.
இராணுவத்தின் இரண்டு பிரிவுகள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மலை உச்சியில் இருந்து ஒரு குழுவும், மலைக்கு அடியில் இருந்து ஒரு குழுவும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
The boy fell off a steep cliff and is about 30m from the clifftop. Communication has been established with the boy and he is safe. Rescue operation started at 5.45 am. Drones are being used for surveillance of location and choppers are on standby at Sulur Airbase: Army Sources
— ANI (@ANI) February 9, 2022
கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விமானம், மீட்புப் பணிக்கு விரைவில் வரும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
ALSO READ | குரும்பாச்சி மலையில் சிக்கிய இளைஞர்
மலம்புழாவில் பாறையில் சிக்கிய பாபுவை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, பள்ளத்தாக்கில் இருந்து இளைஞர்களை மீட்க முடியும் என்பது ராணுவக் குழுவினர் தகவல் தெரிவித்திருந்தனர்.
சேரட்டைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து குரும்பாச்சி மலைக்கு டிரக்கிங் சென்றுள்ளார். அவர்கள் கீழே இறக்கும்போது தவறி விழுந்த பாபு, செங்குத்து பாறை ஒன்றின் குகைக்குள் சென்று சிக்கிக்கொண்டார்.
அவரை மீட்க குச்சி, கயிறு உள்ளிட்டவைகளைக் கொண்டு அவரது நண்பர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. உடனடியாக கீழே சென்ற அவர்கள், காவல்துறையிடம் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் இளைஞரை மீட்க, எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இரவு நேரம் என்பதால் மீட்பு முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டு காலையில் தொடங்கியது.
இதில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால் கொச்சியில் இருந்து கடலோர காவல்படை ஹெலிக்காப்டர் வரவழைக்கப்பட்டது. ஹெலிக்காப்டர் மூலம் கயிறை கொடுத்து பாபுவை மீட்க முயன்றனர்.
வெற்றிகரமாக மீட்கப்பட்ட மலம்புழாவில் கேரள இளைஞர் மூன்று நாட்களுக்கு பிறகு பாறையில் இருந்து மட்டுமல்ல, அச்சத்தில் இருந்தும் வெளிவந்தார்.
மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR