பிரதமரின் மோடியின் ஆலோசகரும் நிடி ஆயோக்கின் தலைவருமான அரவிந்த் பனகாரியா ஆர்.பி.ஐ.,யின் புதிய கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான, அதிகார்பூர்வ அறிவிப்பு 2 நாட்களுக்குள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஆர்.பி.ஐ.,யின் தற்போதைய கவர்னராக பதவி வகித்து வரும் ரகுராம் ராஜனின் பதவிகாலம் செப்டம்பருடன் முடிவடைகிறது. இரண்டாவது முறையாக பதவி வகிக்க தனக்கு விருப்பமில்லை என ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து ஆர்.பி.ஐ.,யின் புதிய கவர்னரை தேர்ந்தெடுக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையின் ஆர்.பி.ஐ புதிய கவர்னராக பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோகரான அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட உள்ளதாக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான, அதிகார்பூர்வ அறிவிப்பு 2 நாட்களுக்குள் வெளியாகும் என தெரிகிறது.
அரவிந்த் பனகாரியா தற்போது மத்திய அரசின் நிதித்துறை ஆலோசனை குழுவான நிடி ஆயோக்கின் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும், இவர் ஜி-20 நாடுகள் அமைப்பில் இந்திய பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார்.