லாலு குடும்பத்தில் பிளவு? அரசியலை விட்டு விலகுவேன் என மகன் அறிவிப்பு

பீகாரில் லாலு யாதவ் குடும்பத்தில் பிளவு ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது என தகவல்கள் தொடர்ந்து வருகின்றன. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 2, 2018, 11:15 PM IST
லாலு குடும்பத்தில் பிளவு? அரசியலை விட்டு விலகுவேன் என மகன் அறிவிப்பு title=

உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் குடும்பத்தில் ஏற்பட்ட விவகாரம் போல, பீகாரில் லாலு யாதவ் குடும்பத்தில் பிளவு ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது என தகவல்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக லாலூ யாதவின் குடும்பத்தில் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மூலம் சிக்கல்கள் உருவாகி இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளை தென்படுகிறது. இந்த மோதல் பீகார் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தேஜ் பிரதாப் யாதவ் தனது தாய் ராபரி தேவிக்கு எதிராக தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதிவிட்டு உள்ளார். அதில் கட்சியில் எனக்கு எதிராக சிலர் செயல்படுவதாகவும், இதனால் கட்சியில் பிளவு ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த நிலைமை தொடரும் என்றால், நான் அரசியலை விட்டு விலகுக் சூழ்நிலை ஏற்படும் என தெளிவாக எழுதியுள்ளார். ஆனால் இந்த பதிவில் தனது குடும்பத்தை பற்றியே அதிகமாக தாக்கி எழுதியுள்ளார். இதனால் பீகார் அரசியலில் இச்சம்பவம் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. லாலு யாதவ் குடும்பத்தில் பிளவு ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ், இந்த பதிவை நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (Rashtriya Janata Dal ) கட்சியில் தான் புறக்கணிக்கப்படுவதாகவும், எனக்கு எதிராக சிலர் செயல்படுவதாகவும், தனது தாயர் ராபரி தேவி மற்றும் தந்தை லாலுவிடம் பல தடவை அவர் குற்றம் சாட்டி உள்ளார். 

இந்நிலையில், தனது  ஃபேஸ்புக் பக்கத்தில், ஆர்.ஜே.டி தலைவர் ஓம் பிரகாஷ் யாதவ் மற்றும் பிகார் சட்டமன்ற உறுப்பினரான சுபோத் குமார் ராய் ஆகியோர் எனது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக, தன்னை "பாகல்" மற்றும் "சங்கி" (மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்) என்று கூறுவதாகவும், எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் பதிவிட்டு உள்ளார். எனது சட்டசபை தொகுதியான "மஹுவாவில் டி-பார்ட்டி மூலம் தொழிலாளர்களின் பிரச்சனையை கேட்டு அவற்றைத் தீர்க்க நான் சென்றேன். அங்கேயும் ஓம் பிரகாஷ் யாதவ் மற்றும் சுபாத் ராய் எனக்கு எதிராக செயல்பட்டனர் என கூறியுள்ளார். இதுகுறித்து தனது தாயர் ராபரி தேவியிடம் முறையிட்டதாகவும், ஆனால் தனது தாயார் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை என பதிவில் கூறியுள்ளார். 

ஓம் பிரகாஷ் யாதவ் மற்றும் சுபோத் குமார் ராய் ஆகியோருக்கு எதிராக கட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், நான் அரசியலை விட்டு விலகுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News