சிபிஐ புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லா நியமனம்!!

சிபிஐ புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லாவை மத்திய அரசு இன்று நியமனம் செய்துள்ளார்.

Last Updated : Feb 2, 2019, 06:37 PM IST
சிபிஐ புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லா நியமனம்!! title=

சிபிஐ புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லாவை மத்திய அரசு இன்று நியமனம் செய்துள்ளார்.

சிபிஐயின் தலைமை அதிகாரியான அலோக் வர்மா, அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரி ராகேஷ் அஸ்தானா இருவருக்குமிடையே முரண்பாடு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து மத்திய அரசால் கடந்த அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து மீண்டும் சிபிஐ இயக்குனராக பதவி ஏற்றார். பின்னர் அவரை மத்திய அரசு தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமித்ததால், அவர் பணியில் இருந்து விலகி விட்டார்.

இதேபோல் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, அவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. இதனால், இடைக்கால சிபிஐ இயக்குனராக நாகேஷ்வர ராவ் மீண்டும் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, சிபிஐ துறைக்கு நிரந்தரமாக இரு இயக்குனரை மத்திய அரசு இன்னும் நியமிக்காதது ஏன்? என சுப்ரீம் கோர்ட் நேற்று கேள்வி எழுப்பியது.

புதிய சிபிஐ இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று இரவு நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், சிபிஐயின் புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லாவை நியமனம் செய்து மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 

Trending News