ரோஜ்கர் மேளா 2023: 51 ஆயிரம் பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கிய பிரதமர் மோடி

Rozgar Mela 2023: ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைக்கான நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். ரோஜ்கர் மேளா திட்டம் என்றால் என்ன? அதன் பணி என்ன? அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 28, 2023, 04:20 PM IST
  • 51 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைக்கான நியமனக் கடிதங்களை பிரதமர் வழங்கினார்.
  • ரோஜ்கர் மேளா திட்டத்தில் இதுவரை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை -மோடி
  • ரோஜ்கர் மேளா திட்டத்தில் கீழ் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு நம்பிக்கை.
ரோஜ்கர் மேளா 2023: 51 ஆயிரம் பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கிய பிரதமர் மோடி title=

Rozgar Mela 2023 Job: இன்று பிரதமர் நரேந்திர மோடி ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு முகாம் கண்காட்சியில் உரையாற்றிய பிரதமர், இளைஞர்கள் மீதான நமது அர்ப்பணிப்புக்கு இந்த ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு முகாம் சான்று. இப்போது அரசாங்கம் வெறும் அறிவிப்புகளை மட்டும் அறிவிப்பதில்லை, அதற்கான வேலைகளையும் செய்கிறது என்று பிரதமர் கூறினார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் வேலைவாய்ப்பு -பிரதமர் மோடி

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைக்கான நியமனக் கடிதங்களை வழங்கிய பிரதமர் மோடி தனது உரையில், கடந்த 2022 அக்டோபரில் தொடங்கிய ரோஸ்கர் வேலைவாய்ப்பு முகாம் மூலம், மத்திய மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்குவதன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

51,000 குடும்பங்களுக்கு இன்றே தீபாவளி ஆரம்பம் -பிரதமர் மோடி

கடந்த ஆண்டு அக்டோபரில் ரோஜ்கர் மேளா திட்டத்தின் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கப்பட்டதாகவும், இதுவரை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். இன்று 51,000 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. ஆனால் பணி நியமனக் கடிதம் பெற்ற 51,000 பேரின் குடும்பங்களுக்கு இது தீபாவளி பண்டிகை போன்றது என்றார்,

மேலும் படிக்க - மின்கட்டணம் உயர்வுக்கு காரணம் யார்? அதானிக்கு எதிராக ராகுல் கூறிய குற்றச்சாட்டுகள் என்ன?

ரோஜ்கர் மேளா திட்டம் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்பு -மோடி

இளைஞர்கள் மீதான நமது அர்ப்பணிப்புக்கு இந்த ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு முகாம் சான்று. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நமது அரசு திட்டங்களை தீட்டி சரியான முறையில் செயல்பட்டு வருகிறது. நாங்கள் வேலைகளை வழங்குவது மட்டுமல்லாமல், அந்தந்த துறையை வெளிப்படையானதாக மாற்றுகிறோம். நாங்கள் ஆட்சேர்ப்பு செயல்முறையை ஒழுங்குபடுத்தியது மட்டுமல்லாமல் சில தேர்வுகளை மறுசீரமைத்தோம் என பிரதமர் கூறினார்.

ஒவ்வொரு துறையிலும் புதிய வேலை வாய்ப்புகள் -பிரதமர் மோடி

இன்று இந்தியா அனைத்து துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறது. ஒவ்வொரு துறையிலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்று பிரதமர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள தோர்டோ என்ற கிராமம், சிறந்த சுற்றுலா கிராமமாக ஐ.நா.வால் கவுரவிக்கப்பட்டது. இது ஒரு பெரிய சாதனை என்று அவர் கூறினார். இந்தியாவில் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை எந்தளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும் என்று பிரதமர் கூறினார்.

மேலும் படிக்க - நடுத்தர வர்க்கத்திற்கான வீட்டு வசதி திட்டம்... இனி குறைந்த விலையில் வீடு வாங்கலாம்!

51,000 பேருக்கு எந்த துறைகளில் வேலை கிடைக்கும்?

பிரதமரால் இன்று இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதங்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவை. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் இந்தப் பணியாளர்கள், உள்துறை அமைச்சகம், வருவாய்த் துறை, ரயில்வே அமைச்சகம், உயர் கல்வித் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறை, கல்வி அமைச்சகம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் சேருவார்கள்.

ரோஜ்கர் மேளா திட்டம் என்றால் என்ன? 

கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி ரோஜ்கார் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினம் முதல்கட்டமாக 75000-க்கும் மேற்பட்டோருக்கு அரசு பணிக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றனர். பின்னர் இதன் தொடர்ச்சியாக நவம்பர் 22, 2022 அன்று, மேலும் 71,000 நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது.

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு, நாடு முழுவதும் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் இந்த திட்டத்தின் கீழ் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.

மேலும் படிக்க - PIDF திட்டத்தின் கீழ் வருகிறது விஸ்வகர்மா திட்டம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட RBI

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News