உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை அறிவித்ததோடு, ரஷ்ய நடவடிக்கையில் தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். கிழக்கு உக்ரைனில் உள்ள பொதுமக்களைப் பாதுகாக்க இந்தத் தாக்குதல் அவசியம் என்றும் விளாடிமிர் புடின் கூறினார்.
ரஷ்யாவின் நோக்கம் உக்ரைனை தனது நாட்டுடன் இணைப்பது அல்ல என்றும், அந்த பிராந்தியத்தை ராணுவ ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தான் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இந்தியாவின் உதவியை நாடினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்களிடம் செல்வாக்கு உள்ளது, அவர் பேசினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் உக்ரைனுக்கு அவர் ஆதரவு தர வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
இதை அடுத்து, ரஷ்யா - உக்ரைன் விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு தலைவருடனும், இங்கிலாந்தின் வெளியுறவு செயலருடனும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். விரைவில் ரஷ்யாவுடனும் பேசி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்ப்பு உலகில் நிலவுகிறது.
Prime Minister Narendra Modi likely to speak to Russian President Vladimir Putin tonight: Sources #RussiaUkraineConflict pic.twitter.com/825LKD0WMC
— ANI (@ANI) February 24, 2022
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் பேசிய இந்தியப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி இருதரப்பும் உடனடியாக படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பதற்றமான சூழலைத் தணிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.