உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை அறிவித்ததோடு, ரஷ்ய நடவடிக்கையில் தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள பொதுமக்களைப் பாதுகாக்க இந்தத் தாக்குதல் அவசியம் என்று விளாடிமிர் புடின் கூறினார்.
ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கான காரணம்
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா பொய்யாக நியாயப்படுத்த முயற்சிக்கும் என அமெரிக்கா ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது. முன்னதாக, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், உக்ரைனை வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (NATO) இணைவது, ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என விளாடிமிர் புடின் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நேட்டோ நாடுகளும் அமெரிக்காவும் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கத் தவறிவிட்டன என்று புதின் கூறியுள்ளார்.
தாக்குதலை நியாயப்படுத்தும் புடின்
உக்ரைனில் இருந்து மேற்கொள்ளப்படும் ராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நோக்கம் உக்ரைனை தனது நாட்டுடன் இணைப்பது அல்ல என்றும், அந்த பிராந்தியத்தை ராணுவ ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தான் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்
வெளிநாடுகளுக்கு புடின் விடுக்கும் எச்சரிக்கை
ரஷ்ய நடவடிக்கையில் தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என விளாடிமிர் புடின் நேட்டோ மற்றும் மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். விளாடிமிர் புட்டினின் உரைக்கு மத்தியில் கியேவ், கார்கிவ், ஒடெசா மற்றும் உக்ரைனின் பிற நகரங்களில் தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நேட்டோ நாடுகளும் அமெரிக்காவும் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்குமா?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பேரழிவை ஏற்படுத்தும் வகையில், திட்டமிடப்பட்ட வகையில் ஒரு போரைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் மக்கள் உயிரிழப்பிற்கும், பேரழிவுகளுக்கும் ரஷ்யா மட்டுமே பொறுப்பாகு எனக் கூறிய ஜோ பைடன், அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும், இதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறினார்.
மூன்றாம் உலகப் போர் மூளூமா...
விளாடிமிர் புட்டினின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை என அமெரிக்கா என்பது மிகத் தெளிவாக கூறியுள்ள நிலையில், நேட்டோ நாடுகளும் உக்ரைனைப் பாதுகாக்க முன்முயற்சிகளை எடுக்க கூடும். உக்ரைன் நேட்டோவில் சேர விரும்புகிறது. ஆனால் ரஷ்யாவின் எதிர்ப்பு அதை எதிர்க்கிறது. நேட்டோ நாடுகள் உக்ரைனைப் பாதுகாக்க விரும்புகின்றன. இந்நிலையில் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்தால், உலகப் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது என்பதை மறுக்க இயலாது.
மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா - உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?
புடின் உலகை எச்சரிப்பதற்கான காரணம்
உக்ரைன் மீதான இராணுவ அடக்குமுறைக்கு மத்தியில், ரஷ்ய நடவடிக்கையில் தலையிட முயற்சிக்க வேண்டாம் என்று புடின் மற்ற நாடுகளை எச்சரித்தார். தனது நாட்டையும் மக்களையும் காப்பதே தனக்கு முக்கியம் என்றும், ரஷ்யாவின் இரையாண்மையை சீர்குலைக்க, அச்சுறுத்த முயற்சிக்கும் எந்த ஒரு நாட்டிற்கும் ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் எனவும், வரலாற்றில் இது வரை சந்திக்காத வகையிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என புடின் எச்சரித்துள்ளார். உக்ரைன் ராணுவ வீரர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு தாயகம் திரும்ப வேண்டும் என்று புதின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR