எஸ்பிஐ வங்கியில் சேர ஆர்வமுள்ளவர்கள், வட்ட அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 3850 காலியிடங்கள் உள்ளன. ஆகஸ்ட் 16, 2020 க்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் விண்ணப்பிக்கலாம்.
SBI CBO ஆட்சேர்ப்பு 2020: SBI CBO, அதாவது சர்கிள் பேஸ்ட் ஆஃபீஸர் பதவியில் சேர விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பத்தை வரவேற்கிறது. ஆகஸ்ட் 16, 2020 க்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
காலியிட விவரங்கள்:
பல்வேறு மாநிலங்களில் வட்டம் சார்ந்த அலுவலர் பதவிக்கு மொத்தம் 3850 காலியிடங்களை எஸ்பிஐ அறிவித்துள்ளது.
அகமதாபாத் - 750
பெங்களூரு - 750
போபால் - 296
சென்னை - 550
ஹைதராபாத் - 550
ஜெய்ப்பூர் - 300
மகாராஷ்டிரா - 517
கோவா - 33
சம்பள விகிதம்:
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதத்திற்கு ரூ .23,700 ஊதியம் வழங்கப்படும்.
முக்கிய தேதி:
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி – 2020 ஜூலை 27ம் தேதி
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி - 2020 ஆகஸ்ட் 16 ம் தேதி
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி - 2020 ஆகஸ்ட் 16 ம் தேதி
கல்வித் தகுதி:
காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பு 30 வயது.
விண்ணப்ப கட்டணம்:
GEN / EWS & OBC விண்ணப்பதாரருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ .750 / - மற்றும் SC /ST / PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர் டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / இன்டர்நெட் வங்கி மூலம் தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்கு முறை:
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் வங்கியில் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sbi.co.in/ மூலம் ஆகஸ்ட் 16, 2020 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான செயல்முறை:
தகுதியான மாணவர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு, நேர்காணலின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.