தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு அளிக்கும் வகையில் கடன் வட்டி மற்றும் முதன்மை கடன் விகிதங்கள் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது SBI வங்கி!
இதன்படி முதன்மை பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
State Bank of India (SBI) brings new year's cheer for its customers by reducing Base rate and Benchmark Prime Lending Rate (BPLR) by 30 basis points (bps) with effect from January 01, 2018. For details, visit https://t.co/us7nUiNyQn
— State Bank of India (@TheOfficialSBI) January 1, 2018
- தற்போது 8.95% உள்ள அடிப்படை கடன் வட்டி 8.65% சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இதேபோல், நிரந்தர முதன்மை கடன் விகிதம் 13.70% -ல் இருந்து 13.40% -ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்பாட்டின் மூலம் சுமார் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளாது!