மம்தாவை விமர்சித்து மீம்ஸ்: பாஜக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமின்

மம்தாவை கிண்டல் செய்து மீம்ஸ் பதிவு வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

Updated: May 14, 2019, 01:19 PM IST
மம்தாவை விமர்சித்து மீம்ஸ்: பாஜக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமின்

மம்தாவை கிண்டல் செய்து மீம்ஸ் பதிவு வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த உடையுடன் இணைத்து, மீம்ஸ் வெளியிட்ட பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அத்துடன் மம்தாவிடன் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.