தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.
இந்நிலையில் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் வங்கி கணக்குகள், கைப்பேசி எண்களுடன் தங்களது ஆதார் எண்னை இணைத்துவிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிரப்பித்திருந்தது.
இதற்கிடையில், மத்திய அரசு வழங்கிவரும் நலத் திட்டங்கள் பெற பொதுமக்கள் ஆதாரை கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும் என்பதை எதிர்த்து பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு முன், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நடைபெற்று வருகின்றது.
The five-judge Constitution bench of the Supreme Court, headed by Chief Justice of India Dipak Misra, said the government cannot insist for mandatory #Aadhaar
— ANI (@ANI) March 13, 2018
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை, ஆதார் இணைப்பு கட்டாயம் என்பது அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது.
அதாவது வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கைப்பேசி எண் மற்றும் வங்கி கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என குறிப்பிட்டுள்ளது!