எல்லையில் 4 மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

Last Updated : Oct 7, 2016, 11:24 AM IST
எல்லையில் 4 மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை title=

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைத்துள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநில முதல்வர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்களை சந்தித்து பேசிய பிறகு, பாதுகாப்பு படையினரையும் அழைத்து எல்லையோர பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார். யூரி தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தொடர்ந்து எல்லையோர பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளை எப்படி தடுப்பது மற்றும் எல்லை பாதுகாப்பு குறித்தும் விவாதிக்க இந்த கூட்டத்திற்கு ராஜ்நாத் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த மாதம் யூரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பயங்கரவாதிகள் 7 முகாம்களை அதிரடி தாக்குதல் நடத்தி இந்திய ராணுவம் அழித்தது. இதனால் எல்லையில் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆலோசனை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Trending News