மூத்த பத்திரிகையாளர் கே.ஜே. சிங் மற்றும் அவரது 92 வயது தாய் இருவரும் இன்று(சனிக்கிழமை) மொஹலலியில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப் பட்டுள்ளனர்.
ANI அறிக்கையின்படி, இருவரும் கொடுரமான நிலையினில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, ஷிமிமாணி அகாலித் தலைவர் சுகுபிர் சிங் பாதல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "மூத்த பத்திரிகையாளர் கே.ஜே. சிங் அவரது தாயுடன் கொலை செய்யப்பட்டது பெரும் வருத்தத்தினை ஏற்படுத்துகிறது" என பதிவிட்டுள்ளார்.
Just heard senior journalist KJ Singh has been murdered along with his mother.Condemn this killing and urge authorities to nab culprits imm.
— Sukhbir Singh Badal (@officeofssbadal) September 23, 2017
சுகுபிர் சிங் பாதல், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல்துறையினரை ஆவனம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னர், டின்ட்ராட் செய்தி தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் சாந்தனு புவ்மிக், மேற்கு திரிபுரா மாவட்டத்தில் பேரணியில் ஒன்றில் ஈடுபட்ட போது கொல்லப்பட்டார். இதேப்போல் செப்டம்பர் 5-ஆம் நாள் புகழ்பெற்ற பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூரில் தனது இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டு வருவது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.