சிந்த்வாரா: கணினியில் ஏற்பட்ட பிழையோ அல்லது மனிதப் பிழையோ, எதுவென்று தெரியவில்லை, ஆனால் NEET தேர்வு (NEET Exam) முடிவுகளைப் பார்த்த ஒரு பெண், அதை முற்றிலும் நம்ப முடியாமல் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு சென்று விட்டார்.
மருத்துவராக ஆக விரும்பிய மத்தியப் பிரதேசத்தைச் (Madhya Pradesh) சேர்ந்த விதி சூர்யவன்ஷி, தனது நீட் முடிவுகளை செக் செய்த போது, தன் பெயருக்கு அருகில் வெறும் 6 மதிப்பெண்களே இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
புத்திசாலி மாணவியான அவர், நீட் தேர்வில் இத்தனை குறைவான ஒற்றை இலக்க மதிப்பெண்களைப் பெறுவார் என அவரது குடும்பத்தினரால் நம்ப முடியவில்லை. எனவே அவர்கள் OMR தாளை ரீகால் செய்து பார்த்தனர். அதன் பிறகுதான விதி என்ற அந்தப் பெண் உண்மையில் நீட் தேர்வில் 590 மதிப்பெண்கள் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.
விதியால், தனக்கு மிகக் குறைவான மதிப்பெண்கள் வந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், அவர் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ: NEET 2020 Topper: 720/720 எடுத்த Shoyib Aftab-ன் வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா?
நீட் 2020 (NEET 2020) முடிவை அக்டோபர் 16 ஆம் தேதி தேசிய சோதனை நிறுவனம் (NTA) அறிவித்தது. ஒடிசாவின் சோயெப் அப்தாப் மற்றும் டெல்லியின் அகன்ஷா சிங் ஆகியோர் தேசிய தகுதி-நுழைவுத் தேர்வு 2020 இல் 720 / 720 மதிப்பெண்களைப் பெற்று வரலாறு படைத்தனர்.
NTA, நீட் தேர்வின் அனைத்து பிரிவுகளின் NEET Answer Keys மற்றும் மாணவர்களின் OMR தாள்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் செப்டம்பர் 13 அன்று நீட் 2020 தேர்வுகள் நடந்து முடிந்தன. தேர்வு எழுதிய 15.97 லட்சம் மாணவர்களில் 85-90 சதவீதம் பேர் நீட் 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றனர். தொற்றுநோய் காரணமாக செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்வு எழுத முடியாமல் போன சுமார் 300 மாணவர்கள் அக்டோபர் 14 ஆம் தேதி தேர்வு தேர்வு எழுதினர்.
மாணவர்கள் மதிப்பெண்கள்தான் வாழ்க்கை என்ற மாய பிம்பத்திலிருந்து வெளியே வர வேண்டும். தங்கள் மீதிருக்கும் நம்பிக்கையை விட்டு விடக்கூடாது. இப்படிப்பட்ட தருணங்களில் பொறுமையைக் கடைபிடிப்பது மிக அவசியமாகும். தற்கொலை எதற்கும் தீர்வாகாது!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR