மூன்று நாட்கள் ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளதால் ஜாபர் சாதிக்கிடமும், அவரது மனைவியிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் பகுதியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் தாய் மற்றும் இரண்டு மகள்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா? நடந்தது என்ன?
காட்பாடி அருகே செல்போன் திருடியதாக அடித்து கொலை செய்து சன்னியாசி ஒருவர் புதைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
ஆபாசமாக கேள்வி கேட்டு 'யூடியூப்' சேனலில் பதிவேற்றம் ; பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் பெண் தற்கொலை முயற்சி.
CBCID Police Raid BJP MLA Nayanar Nagendran's Associate's House : தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு.
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது விவகாரம், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய தீவிர சோதனை.
பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 11ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
விழிஞ்சம் கடற்கரை ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக பரப்பப்படும் அனைத்து தகவல்களும் பொய்யானவை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி உதவியாளர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ரயில் தீ விபத்தின்போது தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள் கைது செய்யபட்டிருக்கும் நிலையில், அவர்களிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் விசாரணை நடத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.