பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும்: பிபின் ராவத்

Last Updated : May 4, 2017, 03:55 PM IST
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும்: பிபின் ராவத் title=

காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் கடந்த மே 1-ம் தேதி இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது 2 இந்திய பாதுகாப்பு எல்லைச்சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் திடீரென தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த சண்டை ஓய்ந்த பிறகு உயிரிழந்த 2 வீரர்களின் உடல்களை மீட்கும் பணிகளை இந்திய ராணுவம் தொடங்கியது. அப்போது அவர்களது தலையை பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் துண்டித்து உடல்களை சிதைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்திய வீரர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இன்று கூறியதாவது:-

இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவ வீரர்கள் 2 பேரின் தலையை பாகிஸ்தான் ராணுவம் துண்டித்தது போன்ற எதிரிகளின் செயல்களுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு மற்றும் அவர்களது உடல்கள் சிதைக்கப்பட்ட பின்னர் இந்தியா மேற்கொள்ள உள்ள நடவடிக்கை பற்றி பகிர்ந்து கொள்ள அவர் மறுத்து விட்டார். வருங்கால திட்டங்கள் பற்றி முன்பே இந்திய ராணுவம் பேசுவதில்லை. எங்களின் நடவடிக்கைக்கு பின் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

Trending News