Supreme Court vs Ramdev: மருத்துவம் குறித்து பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தவறான விளம்பர வெளியிட்டது தொடர்பான வழக்கில் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருவரின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அலட்சியமான உங்கள் மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை. அதனால் அந்த மன்னிப்பை நாங்கள் நிராகரிக்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
பாபா ராம்தேவ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி விசாரணை நடந்தபோது, பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இருவரும் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜாராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். ஆனால் நீதிபதிகள், மன்னிப்பை எழுத்துப்பூர்வமாக ஏன் தாக்கல் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினர். நீங்கள் செய்திருப்பது "மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு" செயல் என்றுக் கூறி, பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மீறிவிட்டு, தற்போது வந்து "மன்னிப்பு" என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்
இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி மற்றும் நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கேலிக்கூத்தாக்கப்பட்டு உள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தை கண்டித்த நீதிமன்றம், பிரமாணப் பத்திரத்தில் என்ன கூறியுள்ளீர்கள்? மன்னிப்பு கேட்கும் போது மிக அலட்சியமாக நடந்து கொள்கிறீர்கள். அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்களுக்கு காட்டக்கூடாது?
மேலும் படிக்க - அவங்க அப்பாவால் கூட என்னை கைது செய்ய முடியாது: பாபா ராம்தேவ் வீடியோவால் பரபரப்பு
பிரமாண பத்திரத்தில் மோசடி செய்கிறீர்கள், அதை தயாரித்தது யார்? எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் அப்படி ஒரு பிரமாணப் பத்திரத்தை அளித்திருக்கக் கூடாது என்று நீதிபதி அமானுல்லா கூறினார்.
அப்போது வழக்கறிஞர் முகுல் ரோகத்கி கூறுகையில், நாங்கள் தவறு செய்துவிட்டோம் எனக் கூறினார். அதற்கு உச்ச நீதிமன்றம் நீதிபதிகள், தவறு! மிகக் குறுகிய வார்த்தை. நாங்கள் அதை முடிவு செய்வோம். இது நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறுவதாகவே கருதுகிறோம் என நீதிபதி நீதிபதி அமானுல்லா கூறினார்.
எங்கள் உத்தரவுக்குப் பிறகும்? நீங்கள் அலட்சியமாக இருந்துள்ளீர்கள். உங்கள் மன்னிப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். அது வெறும் காகிதம். நாங்கள் குருடர்கள் அல்ல! நாங்கள் எல்லாவற்றையும் பார்க்கிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறினார்.
நீதிபதி ஹிமா கோஹ்லி, "பிரமாணப் பத்திரம் எங்கள் முன் வருவதற்கு முன்பே ஊடகங்களில் வெளியானது. இது விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டதா அல்லது எங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டதா?'' என்று நீதிபதி அமானுல்லா கேள்வி எழுப்பினார். நீங்கள் தவறு செய்து விட்டீர்கள். அதன் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் எனக் கூறிய உச்சநீதிமன்றம் நீதிபதிகள், "பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தை நிராகரித்தனர்.
மேலும் படிக்க - உச்ச நீதிமன்றத்தில் “நிபந்தனையற்ற மன்னிப்பு” கேட்ட யோகா குரு பாபா ராம்தேவ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ